அம்பத்தூர், ஜூலை 16-
போரூரில் விலை உயர்ந்த பைக் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
சென்னை போரூர் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் (21). இவர் தனியார் மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்கிறார். சமீபத்தில் இவர் தனது அடுக்குமாடி குடியிருப்பின் கீழ் தளத்தில் நிறுத்தி வைத்திருந்த ரூ.2.50 லட்சம் மதிப்புள்ள விலை உயர்ந்த இருசக்கர வாகனம் காணாமல் போனது.
இதுகுறித்து ரமேஷ் போரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது இருசக்கர வாகனத்தை திருடிய நபர் சென்னை, சின்ன போரூர் பஜனை கோயில் தெருவைச் சேர்ந்த விக்னேஷ் (எ) விக்கி (22) என்பது தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையினர் அவரை கைது செய்து, அவரிடமிருந்த இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.