சென்னை தி.நகரைச் சேர்ந்த சந்தோஷ் (21), அபினாஷ் (22) எனும் இரண்டு இளை ஞர்கள் சபரிமலைக்கு சென்றிருந்த னர். அங்கு வழிபாட்டை முடித்துக் கொண்டு ஊர் திரும்பும் போது டிச.27 அன்று பம்பா நதிக்கரையில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது ஆற்று வெள்ளப் பெருக்கில் அடித்துச் செல்லப்பட்டு இறந்து விட்ட செய்தி கிடைத்ததும் அவர்களது குடும்பத்தினர் பதறி னர். உயிரிழந்த இருவரது உடலும் கேரளாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் வைக்கப்பட்டி ருந்தது. இருவரது சடலங்களை சென்னைக்குக் கொண்டு வர வழியற்று தத்தளித்தனர். மேலும், ரூபாய் திரட்ட முடியாமல் துயரத்தில் அவதியு ற்றனர். இப்படியாக பரிதவித்த அவர்களது உறவினரும், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் ஆயிரம் விளக்கு பகுதி தலைவரு மான ஆர்.சங்கர், சமயோசிதமாக, துயர நிலையை மார்க்சிஸ்ட் கட்சி யின் மத்திய சென்னை மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ்.கே.முருகேஷ், ஆயிரம் விளக்கு பகுதிச் செயலாளர் வெ.இரவீந்திர பாரதியிடமும் தெரிவித்தார். இதனையடுத்து, மத்திய சென்னை மாவட்ட செயலாளர் ஜி.செல்வா, கோவை தொகுதி மக்களவை உறுப்பினர் பி.ஆர்.நடராஜனை தொடர்பு கொண்டு பேசி னார். இக்கட்டான நிலைமையை உணர்ந்து கொண்டு, பி.ஆர்.நடரா ஜன், ஆலப்புழா மக்களவை தொகுதி உறுப்பினர் ஏ.எம்.ஆரிப்பிடம் பேசினார். இதனையடுத்து, அவரது தலையீட்டின் பேரில் விரைந்து செயல்பட்ட செங்கனூர்பகுதி சிபிஎம் ஊழியர்கள் டிச.28 நேரடியாக தனியார்மருத்துவமனைக்கு சென்று, சடலங்களை அரசு மருத்துவ மனைக்கு மாற்றி, உடனடி பிரேத பரிசோதனைக்கு ஏற்பாடு செய்த னர். செங்கனூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், மீன்வளத்துறை அமைச்சருமான சாஜிசெரியன், அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று சோகத்தில் இருந்த குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி, அரசு சார்பில் இலவசஆம்புலன்சை ஏற்பாடு செய்து கொடுத்தார். அத்து டன், அந்த குடும்பத்திற்கு ரூ.25 ஆயிரம் பணத்தையும் வழங்கினார். இதனையடுத்து டிச.29 ஆம் தேதி அதிகாலை உடல்கள் தி.நகரை வந்தடைந்தன. சந்தோஷ், அபினாஷ் ஆகி யோரது உடல்களுக்கு கட்சியின் மத்திய சென்னை மாவட்டச் செய லாளர் ஜி.செல்வா, பகுதிச் செய லாளர் வெ.இரவீந்திரபாரதி, மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.பால சுப்பிரமணியம் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மகன்களை பறி கொடுத்து, வேதனையான நேரத்தில் உறுதுணையாக நின்று சேவை செய்த மார்க்சிஸ்ட் கட்சி தலைவர் களுக்கு அந்த குடும்ப த்தினர் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.