districts

img

மகாகவி சுப்பிரமணிய பாரதியார்  பிறந்த நாள் முதல்வர் ரங்கசாமி மாலை அணிவித்து மரியாதை

மகாகவி சுப்பிரமணிய பாரதியார்  பிறந்த நாளையொட்டி புதுச்சேரி ரோமன் ரோலண்ட் நூலகம் எதிரில் அமைந்துள்ள அவரது சிலைக்கு முதல்வர் ரங்கசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் சட்டப்பேரவை தலைவர் ஆர்.செல்வம், குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் சாய் ஜே. சரவணன்குமார், மற்றும் எழுத்தாளர்கள், கலைஞர்கள் திரளானோர் சென்று பாரதியார் சிலைக்கு மரியாதை செலுத்தினர். இதனைத் தொடர்ந்து புதுச்சேரி அரசின் கலை பண்பாட்டுத்துறை சார்பில் ஈஸ்வரன் கோயில் வீதியில் அமைந்துள்ள மகாகவி பாரதியார் நினைவு அருங்காட்சியகத்தில் பாரதியாரின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.