கிருஷ்ணகிரி,பிப்.4- கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டியை ஒட்டி பள்ளிகளுக்கு ஓசூர் அரசு விளையாட்டு மைதானத்தில் 2 நாட்கள் தடகளப் போட்டிகள் நடை பெற்றது. கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதி லிருந்தும் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் நீளம் தாண்டுதல் போட்டியில் ஓசூர் நாளந்தா இன்டர்நேஷனல் பப்ளிக் பள்ளியின் 12 ஆம் வகுப்பு மாணவர் கோகுல் விக்ரம் முதலி டம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றார்.