districts

img

கடலூரில் பொதுமுடக்க விதிகளை மீறிய 7 கடைகளுக்கு பூட்டு

கடலூர், ஜூன் 11 கடலூரில் பொதுமுடக்க விதிகளை மீறி திறந்து வைத்தி ருந்த 7 கடைகளுக்கு நகராட்சி அதிகாரிகள் பூட்டு போட்டனர். கொரோனா பரவலைக் கட்டுப்படுத்திட தமிழக அரசு  தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கத்தினை அமல்படுத்தி உள்ளது. இதில், தளர்வு அளிக்கப்படாத சில வகையான  கடைகள் கடலூர் நகரப் பகுதியில் திறந்து வைக்கப்பட்டி ருப்பதாக நகராட்சித் நிர்வாகத்திற்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் பாஸ்கர், சக்திவேல் ஆகியோர் வெள்ளியன்று  திருப்பாதிரி புலியூர், தேரடித் தெரு, பாரதி சாலை, லாரன்ஸ் சாலை பகுதி களில் ஆய்வு செய்தனர். அப்போது லாரன்ஸ் சாலையில் திறந்திருந்த ஜவுளி, பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யும் கடைக்கு சீல் வைத்தனர். மேலும், பாத்திரக்கடை, சலூன், பிளாஸ்டிக் விற்பனை கடை, காதி விற்பனை நிலை யம் உட்பட 7 கடைகளை மூடி பூட்டுப் போட்டனர்.

;