districts

சென்னை முக்கிய செய்திகள்

நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்தி துவக்கம்

காஞ்சிபுரம், ஆக.27 - காஞ்சிபுரம் மாவட்ட கால்நடை பராமரிப்பு துறை சார்பில், 3 நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்தி  சேவையை அமைச்சர் தா.மோ.அன்பரசன் செவ் வாயன்று காஞ்சிபுரத்தில் துவக்கி வைத்தார். காஞ்சிபுரம் மாவட்டத் தில் காஞ்சிபுரம் மற்றும் வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியங்களுக்கும், உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியத்திற்கும், குன்றத்தூர் திருப்பெரும் புதூர் ஆகிய ஊராட்சி களுக்கு ஒன்று என மூன்று ஊர்திகள் தற்போது வழங்கப்பட்டுள்ளது. இந்த ஊர்தி சேவையில் கால்நடை உதவி மருத்து வர் கால்நடை உதவியாளர் மற்றும் ஊர்தி ஓட்டுநர் ஆகியோர் பணிபுரிவர். இந்த ஊர்தி ரூ.16 லட்சம்  மதிப்பீட்டில் உருவாக்கப் பட்டுள்ளது. இதன் மூலம் கிராமங் களுக்கும் கால்நடை மருத்துவ சேவைகளுக்கு முழுவதும் நோய் கண்டறி தல் தடுப்பூசி செயற்கை  கருவூட்டல் சினை பரிசோ தனை இனப்பெருக்க சேவை கருத்தடை நீக்க பணிகள் சிறிய அளவிலான அறுவை சிகிச்சைகள் மற்றும் அவசர சிகிச்சை உள்ளிட்டவை இதன் மூலம் அளிக்கப்படும். இந்நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம், மாவட்ட ஆட்சி யர் கலைச்செல்வி, சட்ட மன்ற உறுப்பினர் எழிலரசன், மேயர் மகா லட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

சென்னை - நாகர்கோவில் வந்தே பாரத்  ரயில் சேவை ஆக.31 துவக்கம்  

சென்னை, ஆக .27- சென்னை - நாகர்கோ வில் இடையேயான வந்தே பாரத் ரயில் சேவை உள்பட பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி வரும் 31-ம் தேதி தொடங்கி வைக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ரயில்  வாரத்தில் 6 நாட்கள் ஓடும். இது குறித்து  தெற்கு ரயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில்,  ‘சென்னை - நாகர்கோவில் புதன்கிழமை தவிர வாரத் தில் 6 நாட்கள் வந்தே பாரத்  ரயில் சேவை, பெங்களூரு - மதுரை செவ்வாய்க்கிழமை தவிர வாரத்தில் 6 நாட்கள்  வந்தே பாரத் ரயில் சேவை  உள்பட பல்வேறு திட்டங் களை பிரதமர் மோடி வரும் 31-ம் தேதி காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைக்க உள்ளார். சென்னை  சென்ட்ரலில் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடு செய்யப்பட உள்ளது. என்னென்ன திட்டங்களை தொடங்கி வைக்கிறார் என்பது தொடர்பான விவரம் இன்னும் ஓரிரு நாளில்  தெரியவரும் என அவர் கூறினார்.

அறுவை சிகிச்சை இல்லாமல் முதியவருக்கு  நான்கு புற்று நோய் கட்டிகள் அகற்றம்

சென்னை, ஆக. 27- எந்தவித இல்லாத நோய் பாதிப்பும்  இல்லாத  77 வயது முதியவருக்கு  அறு வை சிகிச்சை இல்லாமல் கல்லீரலில் இருந்த 4 புற்றுநோய் கட்டிகள் அகற்றப் பட்டன. மேம்பட்ட மருத்துவ பரிசோதனை  செய்யப்பட்டதில், அவருக்கு நாள்பட்ட கல்லீரல் நோய் இருப்பது கண்ட றியப்பட்டது. இதையடுத்து கல்லீரல் மற்றும் மாற்று அறுவை சிகிச்சை இயக்குநர் டாக்டர் ஜாய் வர்கீஸ் தலைமையில் சென்னை கிளெனீகல்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் நோயாளியை பரிசோதித்து அறுவை சிகிச்சை குறித்து விவாதித்தனர்.  ஆனால் வயது காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து டிரான்ஸ்ஆர்டிரியல் கெமோஎம்போலைசேஷன் என்னும் ஒரு குறைந்தபட்ச ஊடுருவும் சிகிச்சை  மேற்கொள்ளப்பட்டது. நோயாளியின் இடுப்பில் உள்ள தமனி வழியாக ஒரு வடிகுழாயை கட்டி உள்ளே செலுத்தி,  கட்டிக்கு கல்லீரல் தமனியின் வழியாக  செல்லும் ரத்த விநியோகத்தைத் தடுத்து நிறுத்தினர். பின்னர் மருந்து களின் கலவை மற்றும் எம்போலிக்  ஏஜென்ட் மூலம் சிகிச்சை அளிக்கப் பட்டது. இந்த சிகிச்சையானது கடந்த 2022-ம் ஆண்டு ஜனவரி மற்றும்  கடந்த ஆண்டு செப்டம்பர் என 2 அமர்வுகளில் செய்யப்பட்டது என்று டாக்டர் ஜாய் வர்கீஸ் கூறினார். பாரம்பரிய கீமோதெரபி போலல் லாமல், கல்லீரல் புற்றுநோய்க்கான தற்போதைய மருந்துகள் குறைந்த  பக்க விளைவுகளுடன் சிறந்த  வாழ்க்கைத் தரத்தை வழங்குவதாக வும் அவர் கூறினார்.

தமிழ்ப்புதல்வன் திட்டத்தில்  6,751 மாணவர்கள் பயன்

விழுப்புரம்,ஆக.27- விழுப்புரம் மாவட்டத்திற்கு, 67.51 லட்சம் ரூபாய் நிதி  ஒதுக்கி, தமிழ்ப்புதல்வன் திட்டத்தின் கீழ் 6,751 மாணவர் களுக்கு, இம்மாதம் முதல் மாதாந்திர உதவித்தொகை 1,000 ரூபாய் வழங்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார். உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கும், தமிழ்ப்புதல்வன் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் 1,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என நிதிநிலை அறிக்கையில் முதல்வர் அறிவித்தார். அதன்படி, விழுப்புரம் மாவட்டத்தில்  77 கல்லூரிகளில் படித்து வரும் 6,751 மாணவர்களுக்கு, ரூ. 1000 வீதம் உதவித்  தொகை வழங்கப்படுகிறது. இதற்காக 67 லட்சத்து 51 ஆயிரம்  ரூபாய் நிதி ஒதுக்கி இந்த உதவித்தொகை வழங்கப்படு கிறது என்று மாவட்ட ஆட்சியர் பழனி வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.