அம்பத்தூர், ஆக. 19- அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயின்ற 2,310 பேருக்கு பெரிய நிறு வனங்களில் வேலை ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் சி.வி.கணேசன் தெரிவித்தார். அம்பத்தூர் அரசு தொழிற்பயிற்சி நிலை யத்தில் 2024- 2025ஆம் ஆண்டுக்கான தொழிற்பயிற்சி வகுப்புகளில் பயிலும் மாண வர்களுக்கு சீருடைகள், பாட புத்தகங்கள், வரைபட கருவிகள் மற்றும் பேருந்து அட்டை உள்ளிட்டவற்றை தொழிலாளர் நலத் துறை அமைச்சர் சி.வி.கணேசன் வழங்கி னார். பின்னர் தொழிற்பயிற்சி நிலை யங்களில் மாணவர் சேர்க்கையை அதி கரிக்கும் பொருட்டு தயாரிக்கப்பட்ட குறும்படத்தையும் வெளியிட்டார். மேலும் ரூ.1.25 கோடி மதிப்பீட்டில் தனியார் நிறுவனத்தின் உதவியுடன் மேம்படுத்தப்பட்டுள்ள விளையாட்டு மைதானத்தை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில பேசிய அமைச்சர் சி.வி.கணேசன், 10ஆம், 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்கள் மட்டுமே தொழிற்பயிற்சி நிலையங்களை தேர்வு செய்யும் நிலைமை இருந்தது. தற்போது எம்பிஏ, எம்ஏ என பட்டப்படிப்பு படித்தவர்களும் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயின்று வருகின்றனர். அரசு தொழிற்பயிற்சி நிலை யங்களில் படித்தால் நிச்சயம் வேலை கிடைக்கும் என்ற நிலைமை தற்போது உருவாகியுள்ளது. அதன்படி கடந்த கல்வியாண்டில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் படித்த 2,700 பேரில் 2,310 பேருக்கு நாட்டின் பெரிய நிறுவனங்களில் வேலை வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது ரூ.2,887 கோடி மதிப்பீட்டில் 71 தொழிற்பயிற்சி நிலையங்கள் நவீன மயமாக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 31 தொழிற்பயிற்சி நிலையங்களையும் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று 4.0 தரத்திற்கு உயர்த்தும் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் கூறினார். இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் ஜோசப் சாமுவேல், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை செயலாளர் கொ.வீரராகவராவ், வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஆணையர் எ.சுந்தரவல்லி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.