districts

img

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிருஷ்ணகிரி மாவட்ட 24 வது மாநாடு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிருஷ்ணகிரி மாவட்ட 24 வது மாநாடு நவ.19,20 ஆகிய இரு நாட்கள் நடைபெறுவதன் துவக்கமாக திங்களன்று (நவ.18) ஓசூர் அசோக் லேலண்ட் யூனிட் 1 தொழிற்சாலை முன்பிருந்து ஓசூர் தியாகி தோழர். சக்திவேல் நினைவு ஜோதி பயணம் துவங்கியது. சிபிஎம் மாவட்ட குழு உறுப்பினர் ஸ்ரீதர் தலைமையில் ஓசூர் மாநகரச் செயலாளர் எம்.ஜி.நாகேஷ் பாபு முன்னிலையில் துவங்கிய இப்பயணத்தில் சிஐடியு மாவட்ட தலைவர் வாசுதேவன்,துணை தலைவர்கள் பீட்டர்,பிரபாகரன் அசோக் லேலண்ட் 1 கிளைச் செயலாளர் ரவி,தொழிற்சங்க இணை செயலாளர் சசிசேகரன், கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜேம்ஸ் ஆஞ்சலா மேரி,மாநகர குழு உறுப்பினர்கள் பி.ஜி. மூர்த்தி,சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.