districts

img

கேரளா வயநாடு நிவாரணம் ராம்ராஜ் காட்டன் ரூ.25 லட்சம்

சென்னை, ஆக. 5-  சமூக நல சிந்தனையோடு பல சேவைகளில் ஈடுபட்டு வரும் ராம்ராஜ் காட்டன் நிறுவனம் கேரளா வயநாடு வெள்ள நிவாரண பணிக்கு நிதி உதவி அளித்துள்ளது.  ராம்ராஜ் காட்டன் நிறுவனர் கே.ஆர். நாகராஜன் ரூ.25 லட்சம், ராம்ராஜ் காட்டன் விளம்பர தூதர் நடிகர்  ஜெயராம்  ரூ. 5 லட்சம் என ரூ.30 லட்சத்திற்கான காசோலையை கேரள முதலமைச்சர் பினராயி விஜயனிடம் வழங்கினார்கள். இது தவிர வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு அவர்களுக்கு தேவையான வேட்டி சட்டைகளை  ராம்ராஜ் காட்டன் சார்பாக ஜெயராம் வழங்க உள்ளதாக அந்நிறுவனத்தின் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது. வயநாடு மக்களுக்கும் மற்றும் கேரள அரசிற்கும் ராம்ராஜ் காட்டன் நிறுவனம் என்றென்றும் துணை நிற்கும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.