அரசாங்க போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் துணைத் தலைவர் எம்.கருணாநிதியின் மகள் கே.கவிபாரதி - எஸ்.கிஷோர்குமார் ஆகியோரின் திருமண வரவேற்பு வெள்ளியன்று (பிப்.14) வடபழனியில் நடைபெற்றது. இந்நிகழ்வில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது அகில இந்திய மாநாட்டிற்கு குடும்ப நிதியாக 10 ஆயிரம் ரூபாயை மணமக்கள் வழங்கினர். கட்சியின் தென் சென்னை மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஜி.செந்தில்குமார், மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.அசோகன், போக்குவரத்து அரங்க இடைக்குழுச் செயலாளர் எஸ்.விஜயகுமார், இடைக்குழு உறுப்பினர் எம்.சீனிவாசன், ஜி.தியாகராஜன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.