districts

img

பத்திரிகையாளர் திருமண உதவித்தொகை ரூ.3 ஆயிரமாக உயர்த்த நலவாரியம் ஒப்புதல்

சென்னை, ஏப். 22 - பத்திரிகையாளர் திருமண உதவித் தொகையை 2 ஆயிரம் ரூபாயிலிருந்து 3  ஆயிரம் ரூபாயாக உயர்த்த பத்திரிகை யாளர் நல வாரியக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. தமிழகத்தில் முதன்முறையாக பத்தி ரியாளர் நலவாரியம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நலவாரியத்தின் முதல் கூட்டம் வெள்ளியன்று (ஏப்.22) தலைமை செயல கத்தில் செய்தித் துறை அமைச்சரும், வாரியத்  தலைவருமான மு.பெ.சாமிநாதன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பத்திரிகையாளர் ஓய்வூதியம் கோரி வரப்பெற்ற விண்ணப் பங்களும், பத்திரிகையாளர் குடும்ப உதவி நிதி கோரி வரப்பெற்ற விண்ணப்பங்களும் பரிசீலிக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டன. அரசாணையில் பத்திரிகையாளர் நல வாரிய உறுப்பினர்களுக்கு திருமண உதவித்  தொகை 2 ஆயிரம் ரூபாய் என நிர்ண யிக்கப்பட்டதை 3 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கிட ஒப்புதல் வழங்கப் பட்டது. இக்கூட்டத்தில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அரசுச் செயலாளர் மகேசன் காசிராஜன், செய்தி மக்கள் தொடர்புத்   துறை இயக்குநர் முனைவர் வீ.ப. ஜெயசீலன், கூடுதல் இயக்குநர் (மக்கள் தொடர்பு) ச. பாண்டியன், பத்திரிகையாளர் நல வாரியத்தின் அலுவல்சாரா உறுப்பினர்கள் சிவந்தி ஆதித்யன் பாலசுப்பிர மணியன் (தினத்தந்தி), ஆர்.எம்.ஆர். ரமேஷ் (தினகரன்), பி.கோலப்பன் (தி இந்து),  லெட்சுமி சுப்பிரமணியன் (தி வீக்), எஸ். கவாஸ்கர் (தீக்கதிர்), எம். ரமேஷ் (புதிய தலை முறை தொலைக்காட்சி) மற்றும் அலுவல்சார்  உறுப்பினர்கள், அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

;