உங்களை தேடி உங்கள் ஊரில் என்ற திட்டத்தின் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் தாலுகா பகுதியில் அரசு நிதி உதவி பெற்று செயல்பட்டு வரும் ஜோசப் அருள் இல்லம் குழந்தைகள் இல்லத்தினை ஆய்வு மேற்கொள்ளும் போது இல்லத்தில் தங்கி கல்வி பயிலும் மாணவிகளில் சிலர் தங்களுக்கு மிதிவண்டி வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதனைத்தொடர்ந்து, திங்களன்று (ஆக.19) அவ்வில்லத்தினைச் சேர்ந்த 12 ஆம் வகுப்பு பயிலும் 7 மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் ச.அருண்ராஜ் மிதி வண்டிகளை வழங்கினார்.