சென்னை, நவ. 21- கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி மெட்ரோ வழித்தடத்தில் உள்ள பணிகள் அனைத்தும் அடுத்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் முடிவடையும் என்றும் 2025ஆம் ஆண்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளதுவும் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. சென்னையில் மெட்ரோ ரயில் போக்குவரத்தில் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. தினமும் லட்சக்கணக் கான பயணிகள் இந்த மெட்ரோ போக்கு வரத்தில் பயணம் செய்து வருகின்ற னர். இந்நிலையில் இந்த மெட்ரோ போக்குவரத்தை சென்னை முழுவதும் இணைக்கும் வகையில் பணிகள் நடைபெற்று வருகிறது. மெட்ரோ சிட்டியாக சென்னை விரைவில் மாறும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. இந்நிலையில் சென்னையில் மெட்ரோ திட்டப்பணிகள் பல்வேறு கட்டங்க ளாக பிரிக்கப்பட்டு நடைபெற்று வருகின்றன. இரண்டாம் கட்டத்தில் நான்காவது வழித்தடமாக கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரை 116 கி.மீ. தூரத்திற்கு 3 வழித்தடங்களில் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த வழித்தடத்தில் ஒரு சில பகுதிகள் வரை சுரங்கப்பாதையாகவும் மீதமுள்ளவை உயர்மட்ட பாதையாக வும் அமைக்கப்படுகிறது. இந்த பாதையில் போரூர் ஏரி அருகே இரண்டாவது வெளிவட்ட சாலையின் மேல் இரும்பு பாலம் அமைக்கும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. உயர்மட்ட மெட்ரோ ரயில் நிலையங்கள் இந்த வழித்தடத்தில் 9 மெட்ரோ சுரங்க ரயில் நிலையங்களும், 18 உயர்மட்ட மெட்ரோ ரயில் நிலையங்க ளும் இடம் பெறுகின்றன. குறிப்பாக தற்போது 18 உயர்மட்ட ரயில் நிலை யங்களில் 13 ரயில் நிலையங்கள் அமைக்கும் பணியானது விறுவிறுப் பாக நடைபெற்று வருகிறது. இதுகுறித்து மெட்ரோ ரயில் நிலைய அதிகாரி கூறுகையில், கோடம்பாக்கம் முதல் பூந்தமல்லி வரை வழித்தடத்தில் உயர்மட்ட பாதைகள் 50 விழுக்காடு முடிவடைந் துள்ளன. இந்த பணிகள் அடுத்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கப்படும். இந்த பாதையை 2025ஆம் ஆண்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. பல இடங்களில் ரயில் நிலையம் அமைக் கும் பணி நடைபெற்று வருகிறது என்றார்.