கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சித்தால், சூளாங்குறிச்சி ஊராட்சிகளில் ‘மக்களை தேடி மனுக்கள்’திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் தலைமையில் நடைபெற்ற முகாமில் 5 கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகமும், சித்தால், சூளாங்குறிச்சி ஊராட்சியை சேர்ந்த 2 மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட இருசக்கர வாகனமும் வழங்கப்பட்டது. சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன், தனித் துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) ராஜலட்சுமி, துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) ராஜா, மாற்றுத்திறனாளி நல அலுவலர் சுப்பிரமணின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.