districts

img

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடசென்னை மாவட்ட மாநாடு

சென்னை, டிச. 1- ஜனநாயகத்தை, அரசி யல் அமைப்பு சாசனத்தை குழிதோண்டி புதைக்கும் பாஜகவை மக்களை திரட்டி வீழ்த்துவோம் என்று மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பி னர் ப.செல்வசிங் கூறினார்.  கட்சியின் வடசென்னை மாவட்ட 2 நாள் மாநாடு எழுச்சிப் பேரணியுடன் மண லியில் தோழர் என்.சங்க ரய்யா, சீத்தாராம் யெச்சூரி நகரில், தோழர்கள் பி.என்.உண்ணி, சு.லெனின் சுந்தர்,  ஜெ.மோகனசுந்தரி நினை வரங்கில் ஞாயிறன்று (டிச. 1)  துவங்கியது.  மாநாட்டுக் கொடியை மணலி பகுதிச் செயலாளர் டி.பாபு வழங்க மூத்த உறுப்பினர் கே.நந்த கோபால் பெற்றுக் கொண்டார். மணலி பகுதி யின் மூத்தஉறுப்பினர் பெரியசாமி கொடியை ஏற்றி வைத்தார். பெரம்பூரில் இருந்து கொண்டு வரப்பட்ட சுதந்திர போராட்ட வீரர் தோழர் என்.சங்கரய்யா நினைவு சுடரை மாவட்ட செயற்குழு உறுப்பினர் அ.விஜயகுமார் வழங்க செயற்குழு உறுப்பினர் எஸ்.கே.மகேந்திரன் பெற்றுக் கொண்டார். மாதவரத்தி லிருந்து கொண்டுவரப் பட்ட தோழர் சீத்தாராம் நினைவு சுடரை மாவட்டக் குழு உறுப்பினர் வி.கமல நாதன் வழங்க செயற்குழு  உறுப்பினர் டி.கே.சண்முக மும், திருவொற்றியூரில் இருந்து கொண்டு வரப்பட்ட தோழர் எம்.என்.எஸ்.வெங்கட்ராமன் நினைவு சுடரை செயற்குழு உறுப்பி னர் எஸ்.பாக்கியலட்சுமி வழங்க செயற்குழு உறுப்பி னர் எஸ்.ராணி பெற்றுக் கொண்டார்.  ஆவடியில் இருந்து கொண்டுவரப்பட்ட தோழர்கள் பி.என்.உண்ணி, சு.லெனின்சுந்தர் நினைவு சுடரை செயற்குழு உறுப்பினர் எல்.பி.சரவணத் தமிழன் கொடுக்க செயற் குழு உறுப்பினர் மா.பூபா லனும், ஆர்.கே.நகரில் இருந்து கொண்டு வரப்பட்ட தோழர் ஜெ.மோகனசுந்தரி நினைவு சுடரை செயற் குழு உறுப்பினர் ஆர்.லோக நாதன் வழங்க செயற்குழு உறுப்பினர் கே.எஸ்.கார்த் தீஷ்குமாரும் பெற்றுக் கொண்டனர்.  பொதுமாநாடு மாநாட்டிற்கு செயற்குழு உறுப்பினர் ஆர்.ஜெயராமன் தலைமை தாங்கினார். வரவேற்புக்குழு தலைவர் ஏ.சங்கர் வரவேற்றார். மாநிலக்குழு உறுப்பினர் எம்.ராமகிருஷ்ணன் அஞ்சலி தீர்மானத்தை வாசி த்தார். சூழலியல் குறித்த கண்காட்சியை மாவட்டக் குழு உறுப்பினர் சி.சுந்தர ராஜ் திறந்து வைத்தார். மாநாட்டை துவக்கி வைத்து  மாநில செயற்குழு உறுப்பி னர் ப.செல்வசிங் பேசினார். பின்னர் பிரதிநிதிகள் மாநாடு தொடங்கியது மாவட்டச் செயலாளர் எல்.சுந்தரராஜ் வேலை- அமைப்பு அறிக்கையும், செயற்குழு உறுப்பினர் வி.ஜானகிராமன் வரவு செலவு அறிக்கையையும் சமர்ப்பித்தனர். இரண்டாவது நாளாக திங்கட்கிழமையும் மாநாடு நடைபெறுகிறது.