districts

தொழில்நுட்ப மையத்தில் முதலீடு

சென்னை, ஜூன் 22-  

    இங்கிலாந்தில் மிகப்பெரிய டிஜிட்டல் வங்கி சேவையை வழங்கி வரும் லாயிட்ஸ் பேங்கிங் குழுமம்   ஹைதராபாத்தில் உள்ள நாலெட்ஜ் சிட்டி மாவட்டத்தில் ஒரு புதிய தொழில்நுட்ப மையத்தில் முதலீடு செய்வ தற்கான முடிவை அறிவித்துள்ளது.  

     இரண்டு  கோடிக்கும் அதிகமான டிஜிட்டல் வழி செயல்படும் பயனர்களைக் கொண்ட இந்தக் குழுமம், இந்த  ஆண்டின் இறுதியில் ஒரு புதிய தொழில்நுட்ப மையத்தைத்  தொடங்கி தன் டிஜிட்டல் திறனை மேலும் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது.

    இது துவக்கத்தில் தொழில்நுட்பம், டேட்டா மற்றும் இணையப் பாதுகாப்பு சார்ந்த்த பொறுப்புகளுக்கு சுமார் 600 திறன்மிக்க நிபுணர்களை பணிக்கு அமர்த்தவுள்ளது என்று  குழுமத்தின் தலைமை செயல்பாட்டு அதிகாரி  ரான்  வான் கெமனேடே  தெரிவித்துள்ளார். இதனால் கூடுதலாக  வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும் அவர் கூறினார்.