districts

img

சூரிய சக்தி பேட்டரி சார்ஜர்: அமைச்சர் மெய்யநாதன் அறிமுகம்

சென்னை,ஆக.12 சூர்ய சக்தியில் இயங்கும் பேட்டரி சார்ஜர்  சாதனத்தை சென்னையில்  மாநில சுற்றுச் சூழல் துறை அமைச்சர் சிவ.மெய்யநாதன் அறிமுகம் செய்துவைத்தார். சென்னையை தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் பிசிக்ஸ் சோலார் நிறுவனம் ஸ்விட்சிங் பேட்டரி இன்க் உடன்  இணைந்து இந்த சாதனத்தை தயாரித் துள்ளது.  கினிமேடிக் சார்ஜர் கேசி5வி என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த சாதனம் புதிய சிங்கா தொழில்நுட்பத்தை (ஒருங்கிணைந்த சூரியஒளி அடுத்த தலை முறை கட்டமைப்பு)  கொண்டதாகும்.  இந்த புதுமையான சார்ஜர், குறைந்த விலையில் சுத்தமான எரிசக்திக்கான ஐக்கிய  நாடுகளின் நிலையான வளர்ச்சி இலக்கு 7-க்கு பங்களிக்கும் வகையில், குறைந்த சூரிய ஆற்றலைப் பயன்படுத்தி ஸ்மார்ட் போன்கள் மற்றும் பிற சாதனங்களை இயக் கும் விதத்தில் உள்ளது  என்று  ஸ்விட்சிங் பேட்டரி இன்க் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி கண்ணப்பன் கூறினார். கையடக்க சார்ஜர் வெறும் 185 கிராம் எடையுள்ள, இந்த சார்ஜர்பல்வேறு பயன் பாடுகளுக்கு ஏற்றது என்றும் அவர் கூறி னார்.