சென்னை சூளைமேட்டில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில், சர்வதேச மகளிர் தினம் புதுமையான வழிமுறையில் கொண்டாடப்பட்டது. பெண்களின் உடல்நலம் மீதான விழிப்புணர்வு பிரச்சாரத்தை உள்ளடக்கிய இக்கொண்டாட்டத்தில் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன. “திறனதிகாரம் அளிக்க குணமாக்கல்” என்ற கருபொருளில் சிறப்பான 32 பெண் ஓவியர்களின் அற்புதமான ஓவிய படைப்புகள், இந்நிகழ்வின்போது கண்காட்சியாக வைக்கப்பட்டிருந்தது. மருத்துவமனையின் மகப்பேறியல் மற்றும் மகளிர் நோயியல் துறையின் முதுநிலை நிபுணர் டாக்டர். ஜெய்ஶ்ரீ கஜராஜ், பெண்களுக்கான உடல்நலம் குறித்து சிறப்புரையாற்றினார்.