districts

img

மணிப்பூர் பாலியல் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும்

திருவண்ணாமலை, மே 6-  திருவண்ணாமலை அடுத்த வேங்கிக்காலில் வேலூர் கோட்டம் காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கத்தின் வெள்ளி விழா மகளிர் மாநாடு சனிக்கிழமையன்று நடைபெற்றது.  இந்த மாநாட்டில் வேலூர் கோட்ட இணை செய லாளர் பி. கங்கா தேவி வரவேற்றார், அகில இந்திய துணைத் தலைவர் பி. சுகந்தி துவக்க உரையாற்றினார், அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்க இணை செயலாளர் எம். கிரிஜா சிறப்பு ரையாற்றினார். தென்மண்டல உழைக்கும் மகளிர் ஒருங்கிணைப்பு குழு இணை அமைப்பாளர் ஆர். எஸ். செண்பகம், வேலூர் கோட்டத் தலைவர் எஸ். பழனிராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மகளிர் துணை குழு அமைப்பாளர் ஆர். அமுதா அறிக்கை சமர்ப்பித்தார். வேலூர் கோட்ட பொதுச் செயலாளர் எஸ் .ராமன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். மகளிர் துணை குழு இணை அமைப்பாளர் வி.டி. சிவப்பிரியா நன்றி கூறினார். தீர்மானங்கள் இந்த மாநாட்டில், நாடாளுமன்றத்தில் சட்ட மன்றங்களிலும் பெண்களுக்கு 33 விழுக்காடு இட ஒதுக்கீட்டை உறுதி செய்யும் மகளிர் சட்டத்தை அடுத்த மக்கட்தொகை கணக்கெடுப்பு வரை காத்திருக்காமல், உடனடியாக அடுத்து வரும் சட்டமன்ற தேர்தல்களில் அமலாக்க வேண்டும் , மணிப்பூரில்  பாலியல் கொடுமைகளுக்கு உள்ளான மகளிருக்கு நியாயம் கிடைக்க குற்றவாளிக்கு கடுமை யான தண்டனை பெறுவது ஒன்றிய, மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும், மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பாஜக எம்.பியும் மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் பிரிஜ்பூஷண் சரண் சிங்கை கைது செய்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. மேலும், இந்த மாநாட்டில் மகளிர் துணைக்குழு இணை அமைப்பாளர் ஆர்.அமுதா மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.

;