districts

img

ஓசூர் உழவர் சந்தையில் காற்றில் பறக்கும் தனிமனித இடைவெளி

கிருஷ்ணகிரி, மே 14- ஓசூர் உழவர் சந்தையில் காற்றில் பறக்கும் கட்டுப்பாடுகள். தொற்று வேகமாகப் பரவும் அபாயம். முன்பு போல பல பகுதிகளில் பிரித்து கடைகள் அமைக்க வேண்டும் என சிஐடியு நடை பாதை வியாபாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து சிஐடியு மாவட்டச் செயலாளர் ஸ்ரீதர், ஓசூர் நடைபாதை வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் பிஜி .மூர்த்தி, கிருஷ்ணன், ராஜேந்திரன் அகியோர் மாந்கராட்சி ஆணையரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: ஓசூர் உழவர் சந்தையில் கட்டப்பட்ட 100க்கும் மேற்பட்ட கடைகளும், காலி இடத்தில் 50க்கும் மேற்பட்ட கடைகள் என 150க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன, இந்த உழவர் சந்தை சுமார் 4 லட்சம் மக்கள் தொகைக்கு ஏற்றதாக இல்லாத காரணத்தால் சாதாரண நாட்களில் ஒரு மணி வரை கூட கூட்டம் அதிகமாக இருக்கும். வெள்ளி, சனி, ஞாயிறு மற்றும் விசேச நாட்களில் கூட்டம் அலைமோதும். தற்போது 12 மணி வரை மட்டுமே என்பதால் அதிகளவில் கூட்டம் கூடுகிறது. பலர் முகக் கவசம் அணியாமலும், தனிமனித இடைவெளியை பின்பற்றுவதில்லை, கொரோனா தொற்றின் 2ஆவது அலையின் பரவல் மாவட்டத்திலேயே ஓசூரில்தான் அதிகமாக உள்ளது. உழவர் சந்தை கூட்ட நெரிசல் காரணமாகவும், முறையாக கட்டுப்பாடுகளை கடைபிடிக்காததாலும் தொற்று இன்னும் வேகமாக பரவும் அபாயம் உள்ளது. எனவே தொற்று வேகத்தை குறைத்திட கடந்தாண்டு தொற்றின் போது, எப்படி உழவர் சந்தையை மூடிவிட்டு, பல பகுதிகளில் பிரித்து கடைகள் அமைக்கப்பட்டதோ, அதுபோல் இப்போதும் அமைக்கப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

;