இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மத்திய சென்னை மாவட்டக்குழு சார்பில் ‘ஜில்லு’ திரைப்படம் திரையிடல் மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி சனிக்கிழமையன்று (அக்.26) அம்பேத்கர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் திரைப்படத்தின் இயக்குநர் திவ்யபாரதிக்கு சங்கத்தின் மாவட்டச் செயலாளர் கே.மணிகண்டன் நினைவு பரிசை வழங்கினார். மாவட்ட இணைச் செயலாளர் ஆ. பிரியதர்ஷினி எம்.சி., தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பொருளாளர் ஜா. பார்த்திபன், மாநிலக்குழு உறுப்பினர் என்.நந்தினி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் லொ. விக்னேஷ், மாவட்டக் குழு உறுப்பினர் நிகில் தேவ் உள்ளிட்டோர் பேசினர்.