districts

img

போதைப் பொருட்களின் சந்தையாக மாறும் இந்தியா

சென்னை, ஆக. 11-

     போதைப் பொருட்களின் சந்தை யாக இந்தியா மாறி வருகிறது என்று சென்னையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.பால பாரதி கூறினார்.

    மதக்கலவரத்தை தேசிய மயமாக்க துடிக்கும் ஒன்றிய பாஜக  அரசை கண்டித்தும், மணிப்பூரில் வன்முறையில் ஈடுபட்ட அனைவ ரையும் கைது செய்ய வலியுறுத்தி யும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திரு.வி.க. நகர் பகுதி குழு  சார்பில் வியாழனன்று (ஆக. 10)  ஓட்டேரியில் பொதுக்கூட்டம் நடை பெற்றது.

    இதில் கே.பாலபாரதி கலந்து  கொண்டு பேசுகையில், நாடாளு மன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது பிரதமர் ஆற்றிய  உரையை கேட்டு பூமி மட்டும்தான் சுற்றவில்லை. மற்ற அனைவருக்கும் தலை சுற்றிவிட்டது. ஏனென்றால் மணிப்பூர் பிரச்சனையை தவிர தேவையில்லாத அனைத்தையும் பேசிக் கொண்டிருந்தார். நாடாளு மன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர் கள் எழுப்பிய ஒரு கேள்விக்கு கூட பிரதமர் பதில் அளிக்கவில்லை. மாறாக எதிர்கட்சிகள் குறித்து ஜனநாயகத்திற்கு விரோதமாக விமர்சனம் செய்து கொண்டிருந்தார்.

விலைவாசி உயர்வு

     உலகம் முழுவதும் பெட்ரோல், டீசல் விலை குறைந்தாலும் இந்தியா வில் மட்டும் கூடிக்கொண்டே இருக்கி றது. இதனால் அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. பெருமுதலாளி கள் செயற்கையான உணவு  தட்டுப்பாட்டை உருவாக்கு கிறார்கள். இதை கட்டுப்படுத்த என்ன  நடவடிக்கை எடுத்தோம் என்பது குறித்து பிரதமர் பேசவில்லை. புதிய  வேலை வாய்ப்புகள் குறித்து பேச வில்லை. பொதுத்துறை நிறுவனங்க ளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப என்ன நடவடிக்கை எடுத் தோம் என்று பேசவில்லை.

  போதைப்பொருட்களின் சந்தையாக இந்தியா

     சர்வதேச அளவில் போதைப் பொருட்களை கடத்தும் சந்தை யாக இந்தியா மாறி வருகிறது. அரசு  நிர்வாகம் போதைப் பொருட் களை கடத்தி வருவதற்கு துணை  போகிறது. அதனால்தான் துறை முகங்களும், விமானத் துறையும் தனியார் மயமாக்கப்படுகிறது. அதன் மூலம் போதைப் பொருட்கள் இந்தியாவிற்குள் கடத்தி  வரப்படுகிறது. இதுதான் இந்தியா வின் பெரும் வணிகமாக இன்று மாறி யுள்ளது. அதனால்தான் எல்லைப்  பகுதிகளில் உள்ள மாநிலங்களில் பாஜக கலவரத்தை தூண்டி அங்கி ருக்கும் மக்களை வெளியேற்றி விட்டு, அந்த நிலங்களை கார்ப்ப ரேட் முதலாளிகளுக்கு வழங்கத் துடிக்கிறது என்று அவர் கூறினார்.

     இன்றும் நாடு முழுவதும் உள்ள பெருநகரங்களில் சொந்த வீடு இல்லாமல், பட்டா இல்லாமல் அவதிப்பட்டு கொண்டிருக்கின்றனர். வேலையில்லாத் திண்டாட்டம் தலை விரித்தாடுகிறது. இது குறித் தெல்லாம் பிரதமர் தனது உரை யில் பேசவே இல்லை. அப்படிப்பட்ட வர் எப்படி ஏழைத் தாயின் மகனாக எப்படி  இருக்க முடியும் என்று பாலபாரதி கேள்வி எழுப்பினார்.

    சாதி, மதம் கடந்து அனைவரும் சக மனிதர்கள் என்ற அடிப்படையில் அனைவரும் ஒன்றிணைந்து வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக வை வீழ்த்த முன்வர வேண்டும்  என்று பாலபாரதி கேட்டுக் கொண்டார். மேலும் பாஜக தோற்றால் தான் தமிழ்நாட்டின் பன்மைத்துவம் காப்பாற்றப்படும், தமிழ் மொழி காப்பாற்றப்படும், மாநில உரிமைகள் பாதுகாக்கப் படும் என்றும் அவர் கூறினார்.  

      வடசென்னை மாவட்டச் செயலாளர் எல்.சுந்தரராஜன், செயற்குழு உறுப்பினர் கே.எஸ்.கார்த்திஷ் குமார், பகுதிச் செய லாளர் வி.செல்வராஜ், முன்னாள்  கவுன்சிலர் பா.தேவி, கிளைச்செய லாளர் பி.மனோகரன் ஆகியோர் பேசினர். முன்னதாக பகுதிக்குழு உறுப்பினர் என்.மோகன் வரவேற் றார். பகுதிக்குழு உறுப்பினர் எஸ்.பூங்குழலி நன்றி கூறினார்.