தென்சென்னை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் த.சுமதி (எ) தமிழச்சி தங்கபாண்டியன், திமுக சென்னை தெற்கு மாவட்டச் செயலாளரும் அமைச்சருமான மா.சுப்பிரமணியன் ஆகியோர் செவ்வாயன்று (ஏப்.16) வேளச்சேரி பகுதியில் இருச்சக்கர வாகன பேரணி நடத்தி வாக்கு சேகரித்தார். அசன் மவுலானா எம்எல்ஏ, திமுக பகுதிச் செயலாளர் துரை கபிலன், சிபிஎம் பகுதிச் செயலாளர் எஸ்.முகமது ரஃபி உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.