சென்னை,பிப்6- சென்னையில் உள்ள சவீதா பல் மருத்துவ கல்லூரியின் முதுகலை மாணவர் டிவிஜ் குல்லர் பல் மருத்துவ துறையில் உலக சாதனை படைத்துள்ளார். இக்கல்லூரியின் செயற்கை பல் வடிவமைத்தல், தயாரித்தல் மற்றும் பொருத்துதல் பிரிவைச் சேர்ந்த முதுகலை மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவர் டிவிஜ் குல்லர், முதுகலைப் படிப்பின் போது 45 நோயாளிகளுக்கு முழு வாய் மற்றும் பற்கள் சீரமைப்பு சிகிச்சையை மேற்கொண்ட முதல் மாணவராக தேர்வு செய்யப்பட்டார். முழு வாய் மறுசீரமைப்பு சிகிச்சை என்பது வாயில் உள்ள அனைத்து பற்களும் கொட்டிய நிலையில் முகம் அழகற்ற நிலையில் காணப்படும். இந்த நிலையில் வாயில் அனைத்து பற்களையும் பொருத்தி முக அழகை தரும் ஒருவகை சிகிச்சையாகும். இதற்கு நோயாளி குறைந்தபட்சம் 14 முறை மருத்து வரை அணுகி சிகிச்சை பெற வேண்டும். தனியார் மருத்து வமனைகளில் உள்ள முழு வாய் சீரமைப்பு சிகிச்சை ஆலோ சகர்கள் கூட தங்கள் வாழ்நாளில் முழு வாய் மறுவாழ்வு சிகிச்சையை செய்திருப்பதற்கான வாய்ப்புகள் இல்லை. இது குறித்து சவீதா பல்கலைக்கழக கல்வியியல் இயக்குனர் டாக்டர் தீபக் நல்லசுவாமி கூறுகையில், டிவிஜ் செய்துள்ள சாதனையால் எங்கள் கல்லூரிக்கு சிறந்த தொரு அங்கீகாரம் கிடைத்துள்ளது என்றார். இந்தியா புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் சாதனை புத்தகத்தில் டிவிஜ் சாதனை இடம் பிடித்துள்ளது. கல்லூரியின் டீன் டாக்டர் எஸ். அரவிந்த் குமார் கூறுகை யில், டாக்டர்.குல்லரின் சாதனை ஒட்டுமொத்த சவீதா பல் மருத்துவக் கல்லூரிக்கும், இந்திய பல் மருத்துவ சமூகத் திற்கும் பெருமை சேர்த்திருக்கிறது என்றார்.