வேலூர், ஜூலை 28-
வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் (விஐடி) மற்றும் அமெரிக்காவில் உள்ள ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக் கழகமும் கல்வி மற்றும் அறிவியல் ஒத்துழைப்பை தொடங்கின.
வேலூர் தொழில்நுட்ப பல்கலைக் கழகமும் (விஐடி) அமெரிக்கா-பால்டி மோர், மேரிலாந்து உள்ள ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் ஆசிரியர் மற்றும் மாணவர் பரிமாற்ற திட்டங்கள், மாணவர் பயிற்சி திட்டங்கள் மற்றும் பல்வேறு படிப்புகள் பற்றிய விவாதங்கள் தொடங்கியுள்ளன.
விஐடியின் நிறுவனர் மற்றும் வேந்தர் டாக்டர் கோ.விசுவநாதன் மற்றும் விஐடியின் சர்வதேச துறை இயக்குநர் ஆகி யோர் சமீபத்தில் அமெரிக்கா வுக்கு பயணம் செய்தனர். அப்போது, ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலை கழகத்திற்கு சென்றனர்.
இதையடுத்து, உல கின் தலைசிறந்த பல்கலைக் கழகங்களின் ஆராய்ச்சி மற்றும் கல்வித்துறை ஒத்துழைப்பில் ஈடுபட்டுள் ளது. மேலும் உலகின் பல தலைசிறந்த பல்கலைக் கழகங்களுடன் ஆராய்ச்சி மற்றும் கல்வித்துறையில் ஒத்துழைப்பில் ஈடுபட உள்ளதாக வேந்தர் தெரி வித்தார்