districts

img

5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழர்கள் வரைந்த ஓவியங்கள்

ஆண்டிப்பட்டி அருகே அழியும் நிலையில்!

கடமலைக்குண்டு, செப்.16- தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகில் உள்ள தங்கம்மாள்புரம்,  மன்னூத்து, அருகவெலி ஆகிய  பகுதிகளில் கற்கால மனிதர்கள் வாழ்ந்ததற்கான பல்வேறு சான்று கள்  உள்ளன. போர்க்களத்தில் இவர்கள் பயிற்சி எடுத்தது, வெற்றிவாகை சூடிவந்தது ஆகிய வற்றை குறிப்பிடும் வகையில் பல கல்வெட்டுகள் கண்டெடுக்கப் பட்டன.  மேலும் போரில் வென்ற  வீரனை குறிப்பிடும் நடுகற்கள், சிதைகற்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்நிலை யில் சுமார்  5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழர்கள் வரைந்த ஓவியங்கள் அழியும் நிலையில் உள்ளன. பெருங்கற் காலம்  எனப்படும் இந்த காலத்தில் வாழ்ந்தவர்கள் அருகவெலி பகுதியில் உள்ள குகையில் பல்வேறு மிருகங்கள் மற்றும் போர்க்கருவிகள் போன்றவற்றின் ஓவியத்தை வரைந்து வைத்திருந்தனர்.

கீழடி போல் அகழாய்வு நடத்துக!

ஆனால் அவை தற்போது அழியும் நிலையில் உள்ளன. நடுகற்கள், சிதைகற்களைப் போன்று பெருங்கற்கால ஓவிய மும் பல்வேறு வரலாற்றுச் சான்றுகளை எடுத்துக் கூறுவ தாகும். சித்திரவண்ண ஓவியங்கள் குடவரைகோவிலில் உள்ள ஓவியங்களை போன்று இருந்தன. தற்போது இங்கு  வசிக்கும் மலைவாழ் மக்கள் அறியாமையால் அதனை தீயிட்டு  அழித்து வருகின்றனர். இதன் உண்மைத்தன்மையை அறிய கீழடியை போன்று இப்பகுதியிலும் அகழாய்வு சோத னை நடத்த வேண்டும் எனவும், இப்பகுதியில் உள்ள வர லாற்றுச் சான்றுகளை பாதுகாப்பாக சேகரித்து வைத்து தமி ழர்களின் வரலாற்று உண்மையை உலகிற்கு தெரிவிக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

;