districts

வீடு தேடிச் சென்று பயிற்றுவிக்கும் அரசு பள்ளி ஆசிரியர்கள்

கடலூர்,ஆக. 4- கடலூர் அருகே அரசுப்பள்ளி ஆசிரி யர்கள் வீடு தேடிச் சென்று பாடம் நடத்தி வரு கின்றனர். கொரோனா பரவலால் அதிகமான பாதிப்பை மாணவ சமுதாயம் சந்தித்து வரு கிறது. கடந்த ஓராண்டிற்கும் மேலாக கல்வி  முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடைபெற்று  வந்தாலும், அதில் கிராமப்புற மாணவர்க ளால் முழுமையாக பங்கேற்க முடியவில்லை. பொருளாதார சூழ்நிலையால் அறிதிறன் செல்போன்களை வாங்க முடியாத பொருளா தார சூழல், மறுபுறம் செல்போன் வைத்தி ருந்தாலும் மாதந்தோறும் அதற்கு பணம் செலுத்த முடியாத நிலை உள்ளது.

மேலும்,  வீட்டிலேயே இருப்பதால் குடும்பச் சூழலால்  மாணவர்கள் வேலைக்கு செல்வதால்  வீட்டில் அமைதியாக இருந்து வகுப்புகளை கவனிக்க முடியவில்லை போன்ற பல்வேறு  காரணிகள் கிராமப்புற மற்றும் பொருளா தாரத்தில் பின்தங்கிய குடும்ப மாணவர்களை  கடுமையாக பாதித்துள்ளது. இந்தச் சூழலில் சில அரசுப் பள்ளி ஆசி ரியர்கள் மாணவர்களை வீடுகளுக்கே தேடிச்  சென்று பாடம் நடத்தி வருவது ஆறுதல் அளித்து வருகிறது. அந்த வகையில், கடலூர்  மாவட்டம் நெல்லிக்குப்பம் நகராட்சி பகுதி யில் உள்ள திருக்கண்டேஸ்வரத்தில் உள்ள  நகராட்சி உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் இந்த உயரிய பணியில் தங்களை ஈடு படுத்திக் கொண்டுள்ளனர்.

இதுகுறித்து, பள்ளியின் தலைமை ஆசிரி யர் க.தேவநாதன் கூறுகையில், கிராமப் பகுதி யில் அமைந்துள்ள பள்ளியில் 6 முதல் 10ஆம்  வகுப்பு வரை உள்ளது. 390 மாணவர்கள் படித்து வருகின்றனர். தமிழ், ஆங்கிலம் வழி யில் பாடம் நடத்தப்பட்டு வருகிறது. 15 ஆசி ரிய, ஆசிரியைகள் பணியாற்றி வருகின்ற னர். கடந்த வாரம் முதல் மாணவர்களைத் தேடி  ஆசிரியர்கள் சென்று வருகின்றனர். தமிழ்,  ஆங்கில வழியில் பயில்வோருக்கு ஒருநாள்  விட்டு ஒருநாள் வகுப்புகள் நடைபெறுகிறது.  வகுப்புகள் நடத்தி, சந்தேகங்களை தீர்த்து  வைப்பதோடு, தேர்வும் நடத்தப்படுகிறது. வீட்டில் இருந்து படிக்கும் மாணவர்களையும் கண்காணித்து வருகின்றனர். கிராமப்புற மாணவர்களுக்கு கண்காணிப்பு பயிற்சி தேவைப்படுவதால் ஆசிரியர்கள் இப்பணி யில் ஈடுபட்டு வருகின்றனர் என்றார்.

இப்பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு ஏதாவது சவால் உளள்ளதா என்ற கேள்விக்கு, மாணவிகளை விட மாணவர்க ளின் ஒத்துழைப்பு மிகவும் குறைவாக உள்ளது. சில கிராமங்களில் பொதுவான இடம் கிடைக்கவில்லை. அப்படியே கிடைத்  தாலும் அங்கு மாணவர்களை அழைத்து வரு வதில் சிரமம் உள்ளது. இதற்காக, மாணவர்க ளின் பெற்றோர்களை சந்தித்து அவர்களிடம் விபரங்களை எடுத்துக் கூறி  வகுப்பிற்கு அனுப்பி வைக்கச் சொல்கிறோம். பொதுமக்கள் ஒத்துழைப்பு: கிராமங்களுக்கே சென்று வகுப்பு நடத்த  பொதுமக்கள் நன்றாக ஒத்துழைப்பு வழங்கு கின்றனர்.

பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் தலைவர் வெங்கடேசன், தனது சொந்த கிராமமான விசுவநாதபுரத்தில் உள்ள  சமுதாய கூடத்தில் வகுப்புகள் நடத்த ஏற்பாடு  செய்து தந்துள்ளார். அதேபோல் ஒவ்வொரு கிராமத்திலும் பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்குகின்றனர். தற்போதைய கடினமான காலத்தில் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் தொடர்ந்து கற்கவும், பள்ளி திறக்கப்  பட்ட பின்னர் அவர் மீண்டும் பள்ளிக்கு வர  வேண்டுமெனில் அவர்களுடன் நாம் தொடர் பில் இருக்க வேண்டும். அப்போதுதான் அவர்  களுக்கும் ஆசிரியர்கள் மீது நம்பிக்கையும், கல்வி மீது ஆர்வமும் ஏற்படும். அந்த முயற்சி யில்தான் எங்கள் பள்ளியின் 15 ஆசிரியர்க ளும் ஈடுபட்டுள்ளனர் என்றார்.

;