தந்தை பெரியாரின் 146 வது பிறந்தநாள் விழா புதுச்சேரி அரசு சார்பில் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது. இதனையொட்டி பிள்ளை தோட்டம் சந்திப்பில் அமைந்துள்ள அவரது சிலைக்கு முதலமைச்சர் ரங்கசாமி, அமைச்சர்கள் லட்சுமிநாராயணன், ஏ.கே. சாய் ஜெ. சரவணன் குமார், பி.ஆர்.என். திருமுருகன் எதிர்கட்சி தலைவர் சிவா மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதேபோல், தீண்டாமை ஒழிப்பு முன்னணி புதுச்சேரி செயலாளர் சரவணன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். சிபிஎம் மாநிலச் செயலாளர் ஆர்.ராஜாங்கம்,செயற்குழு உறுப்பினர்கள் கொளஞ்சியப்பன்,சீனூவாசன்,மாநிலக்குழு உறுப்பினர்கள் கலியன்,சரவணன், நிர்வாகிகள் அரிகிருஷ்ணன், விநாயகம், உமாசாந்தி உட்பட பலர் பங்கேற்றனர்.