புர்ஜ் கலீஃபாவை விட உயரமான பேட்டரியா?
உலகின் மிக உயரமான 3000 அடி உயரம் கொண்ட மிகப்பெரிய பேட்டரியை உருவாக்க எனர்ஜி வால்ட் (Energy Vault) நிறுவனம் திட்டமிட்டுள்ளது. துபாயின் புர்ஜ் கலீஃபா (Burj Khalifa) மற்றும் நியூயார்க்கின் One World Trade Center போன்ற கட்டடங்களை வடிவமைத்த Skidmore, Owings & Merrill (SOM) மற்றும் மின் சேமிப்பு நிறுவனமான Energy Vault ஆகியவை 985 அடி முதல் 3,300 அடி வரை உயரமான பேட்டரிகளை உருவாக்கும் நோக்கத்திற்காக ஒரு ஒப்பந்தத் தில் கையெழுத்திட்டுள்ளன.
இந்தியாவில் ஏஐ பயன்பாட்டை விரிவுபடுத்தும் கூகுள்!
இந்தியாவில், செயற்கை நுண்ண றிவு தொழில்நுட்ப பயன்பாடு களை விரிவுபடுத்தும் முயற்சியில் கூகுள் நிறுவனம் தீவிரமாக செயல்பட்டு வருவதாக அந்நிறுவனத்தின் மூத்த அதிகாரி அபிஷேக் பப்னா தெரிவித்து உள்ளார். ஐஐஎம் கொல்கத்தாவுக்கு வருகை தந்த கூகுள் டீப்மைண்ட் (Google Deep Mind) இன் ப்ரொடக்ஷன் மேனேஜ்மெண்ட் இயக்குநர் அபிஷேக் பப்னா, மொழி மற்றும் வேளாண் துறை சார்ந்து செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப பயன்பாடுகளை அதிகரிக்கும் முயற்சி யில் கூகுள் நிறுவனம் அதன் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை மேம் படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருவ தாக தெரிவித்துள்ளார். தற்போது ஏஐ சாட்பாட்டில், தமிழ், தெலுங்கு, குஜராத்தி, இந்தி, பெங்காலி, கன்னடம், மலையாளம், மராத்தி மற்றும் உருது ஆகிய 9 இந்திய மொழிகள் வழங்கப்பட்டுள்ளன. இதற்கான சரி யான அகராதிகளை தேர்ந்தெடுத்து சரி யான அர்த்தத்தை வழங்குவதில் ஏஐ மாடல்கள் பெறும் சவால்களை சந்திக் கிறது என தெரிவித்தார். இந்த சூழலில், IndicGenBench எனும் இந்திய மொழி களுக்கான மாடல் மற்றும் Agricultural Landscape Understanding (ALU) எனும் API (Application Programming Interface) ஆகியவற்றை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.
ஸ்மார்ட்போனில் “அன்லாக் டூ பவர் ஆஃப்” அம்சம் எதற்கு தெரியுமா?
நாம் பயன்படுத்தும் ஸ்மார்ட் போன்களில் ‘அன்லாக் டு பவர் ஆஃப்’ (Unlock to Power Off) என்ற அம்சம் ஒன்று வழங்கப்பட்டுள்ளது. இதன் பயன்கள் குறித்து பார்க்கலாம். பொதுவாக, ஸ்மார்ட்போன் திருட்டில் ஈடுபடுபவர்கள் திருடிய உடன் போனை ஸ்விட்ச் ஆஃப் செய்து விடுகின்றனர். இதனால் ஸ்மார்ட்போனை டிராக் (Track) செய்ய முடியாது. இதனை தடுக்கவே ஸ்மார்ட்போன் தயா ரிப்பு நிறுவனங்கள், இதற்கென பல அம்சங்களை வழங்கத் தொடங்கி யுள்ளன. அதில் ஒன்று தான் ‘அன்லாக் டூ பவர் ஆஃப்’ (Unlock to Power Off) என்ற அம்சம். இந்த அம்சத்தை enable செய்துவிட்டால், உங்கள் பாஸ்வேர்ட் இல்லாமல் ஸ்மார்ட்போன் ஸ்விட்ச் ஆஃப் செய்ய முடியாது. அன்லாக் டூ பவர் ஆஃப் அம்சத்தை எப்படி இயக்குவது என்று பார்போம். உங்கள் ஸ்மார்ட்போனின் Settings-இல் உள்ள Privacy ஆப்ஷனை க்ளிக் செய்யவும். அதில் உள்ள அன்லாக் டூ பவர் ஆஃப் என்ற ஆப்ஷனை கிளிக் செய்தால் இந்த அம்சம் enable ஆகி விடும்.