சென்னை,ஜூன் 5-
எக்ஸ்கோட் லைஃப் நிறுவனம் ஊட்டச்சத்தின் 50 அம்சங்களை உள்ளடக்கிய இந்தியாவின் மிக விரி வான மரபணு ஊட்டச்சத்து சோதனையை அறிமுகப் படுத்தியுள்ளது.
மரபணு வகையின்படி மேக்ரோ (கார்போ ஹைட்ரேட், புரதம் மற்றும் கொழுப்புகள்) வைட்டமின் மற்றும் தாதுக்கள் பற்றாக் குறை, உண்ணும் நடத்தை, ஊட்டச்சத்துடன் எடை மேலாண்மை, சுவை விருப்பத் தேர்வுகள், உணவுப் பதில்கள் மற்றும் உணவு உணர்திறன் அடிப்படையில் சோதனை நடைபெறுகிறது.
சுகாதாரம் மற்றும் உடல் நலம் குறித்த துறையில் அறிவியல் அடிப்படை யைக் கொண்டு வருவதற்கு உலகளவில் நியூட்ரிஜெனோ மிக் அணுகுமுறைகள் பயன்படுத்தப்படுகின்றன. இது ஊட்டச்சத்து பரிந் துரைகளை மிகவும் நம்பத்தகுந்ததாகவும், ஒவ்வொருவரின் தனிப் பட்ட மரபணு அமைப்புக்கு ஏற்பவும் பரிந்துரைக்க உதவுகிறது. வரும் நாட்க ளில் தோல் மருத்துவம் முதல் புற்றுநோயியல் வரை பல்வேறு சுகாதாரத் துறை களில் நியூட்ரிஜெனோ மிக்ஸ் அதிகளவில் பயன் ்படுத்தப்படவுள்ளது என்று எக்ஸ்கோடு செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.