சிபிஎம் திருக்கழுக்குன்றம் வட்டக்குழு சார்பில் விடுதலை போராட்ட வீரர்கள் பி.ராமமூர்த்தி, என்.சங்கரய்யா, ஜி.வீரய்யன் மூவரின் படத்திறப்பு நிகழ்ச்சி கிளைச் செயலாளர் பி.இராமமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் ப.சு.பாரதி அண்ணா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் பகத்சிங் தாஸ், வட்ட செயலாளர் எம்.குமார், நிர்வாகிகள் எஸ்.அழகேசன், ஜெ.செல்வன், து.மூர்த்தி மற்றும் விஜயகாந்த் உள்ளிட்டோர் உரையாற்றினர்.