districts

போட்டித் தேர்வுக்கு இலவச பயிற்சி

கிருஷ்ணகிரி, மே 15-

    கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

   நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பணியாளர் தேர்வாணையம், வங்கிப் பணி, ரயில்வே பணி ஆகிய போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக் கல்லூரியில் மே 25ஆம் தேதி தொடங்குகிறது. மூன்று மாத காலம் நடைபெறும் இந்தப் பயிற்சி வகுப்பு, சிறந்த பயிற்றுநர்களைக் கொண்டு நடத்தப்படுகிறது. பட்டப்படிப்பு முடித்த மாணவர்கள் இந்தப் பயிற்சில் சேர தங்களுடைய சரியான, முழுமையான விவரங்களைக் கொண்டு இணையதளத்தின் மூலமோ, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் தொடர்பு கொண்டோ, அரசு இ-சேவை மையம் மூலமாகவோ மே 20ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

   மேலும், விவரங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய தொலைபேசி எண் 04343-291983ஐ தொடர்பு கொள்ளலாம்.

    முதலில் புதிவு செய்பவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.