districts

பிரான்ஸ் உயர்கல்வி கண்காட்சி

சென்னை, ஆக.12

     சிமாட்ஸ் பல்கலைக் கழகம் தங்கள் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் வெளிநாடுகளுக்கு சென்று ஆராய்ச்சி மற்றும் மேற்படிப்புகளை  மேற்கொள்வதற்காக  பல்வேறு வாய்ப்புகளை  வழங்கி வருகிறது.

     அந்த வகையில் சிமாட்ஸ் என்ஜினியரிங் கல்லூரி  மாணவர்கள் மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி படிப்பிற்காக  பிரான்ஸ் நாட்டில் படிப்பதற்காக ‘பிரான்ஸ் செல்லவுள்ள னர். இதையொட்டி  பல்கலைக்கழக வளாகத்தில் பிரான்ஸ்  கல்விக் கண்காட்சி நடத்தப்பட்டது. இந்த கண்காட்சியில் அந்நாட்டின் பிரபல பல்கலைக் கழகங்களில் செயல்படும் பள்ளிகள் கலந்துகொண்டன.

    இப் பல்கலைக் கழகங்களின் ஸ்டால்கள் அனைத்தை யும் பார்வையிட்ட கல்லூரி மாணவர்கள் தங்களுக்கு பிடித்தமான படிப்புகள், அதற்கான கல்வி உதவித்தொகை, கல்விக் கட்டணம், விண்ணப்பிதற்கான நடைமுறை ஆகி யவை குறித்து அந்தந்த பல்கலைக்கழகத்தின் அதிகாரி களிடம் நேரடியாக கேட்டறிந்தனர்.