districts

img

சென்னையில் வெள்ளத்தடுப்பு பணிகள் தலைமை செயலர் இறையன்பு ஆய்வு

சென்னை, அக். 9- சென்னையில் வட கிழக்கு பருவ மழை தொடங்க இருப்பதை யொட்டி மழைநீர் வடிகால் அமைக்கும் பணி கள் துரிதமாக நடந்து வரு கிறது.   2079 கி.மீ நீளத்துக்கு மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் 3 துறைகளின் சார்பில் நடந்து வருகிறது. சென்னை மாநகராட்சி, நெடுஞ்சாலைத் துறை, பொதுப்பணித்துறை, சென்னை குடிநீர் வாரியம் ஆகியவை சார்பில் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரு கின்றன. தென்சென்னையை பொருத்தவரை வெள்ள தடுப்பு பணிகள் 80 விழுக்காடு  முடிந்துள்ளது. மேலும் சென்னை நகரம் முழுவதும் வெள்ள தடுப்பு பணிகள் முடிவடைய இன்னும் 1 மாதம் ஆகும் என்று தெரிகிறது. தமிழ கத்தில் வடகிழக்கு பருவ மழை இந்த மாதம் 4-வது வாரம் தொடங்க இருக்கும் நிலையில் சென்னையில் வெள்ள தடுப்பு பணி களை தீவிரப்படுத்தும் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.  இந்த நிலையில் சென்னையில் நடந்துவரும் வெள்ள தடுப்பு பணிகளை தலைமை செயலாளர் இறையன்பு ஞாயிறன்று ஆய்வு செய்தார். சென்னை அசோக்நகர், கே.கே.நகர், வளசரவாக்கம், மணலி உள்ளிட்ட 14 இடங்களில் அவர் மழைநீர் வடிகால் பணிகள், வெள்ள தடுப்பு பணிகள், சாலை சீரமைப்பு பணிகளை அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அடை யாறு ஆற்றில் இருந்து கே.கே.நகர் அண்ணா மெயின்ரோடு வரை 820 மீட்டர் நீளத் துக்கு ரூ.15 கோடி செலவில் மழைநீர் வடிகால் பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகள் நெடுஞ்சாலை துறையின் கீழ் அமைக்கப்பட்டு வரு கிறது. அதன்பிறகு அவர் அசோக்நகர், கே.கே. நகர், வளசரவாக்கம் என ஒவ்வொரு பகுதியிலும் நடைபெற்று வரும் வெள்ள தடுப்பு பணிகளை பார்வையிட்டார். மழைநீர் வடிகால் கட்டு மானங்களையும் அவர் ஆய்வு செய்தார்.   இந்த ஆய்வின் போது சென்னை மாநகராட்சி ஆணையர்  ககன்தீப்சிங் பேடி மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், பொதுப் பணித்துறை அதிகாரிகள், குடிநீர் வாரிய அதிகாரிகளும் உடன் இருந்தனர்.

;