நொச்சிக்குப்பம் கலங்கரை விளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரையிலான லூப் சாலையில் உள்ள மீன் கடைகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து வியாழனன்றும் (ஏப்.13) மீனவர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் த.வேலு, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.