சென்னை, ஜூன் 21- 27 ஆண்டுகளுக்குப் பிறகு 2வது முறையாக மார்பக புற்றுநோயை எதிர்கொண்ட 86 வயது மூதாட்டி மருத்துவர்கள் உரிய நேரத்தில் அளித்த சிகிச்சை யால் முழுமையாக குணமடைந் துள்ளார். பல ஆண்டுகளுக்குப் பிறகு புற்றுநோய் மீண்டும் தாக்கியிருப்பது ஆபத்து என்றாலும் ஆரம்ப நிலையிலேயே நோய் பாதிப்பைக் கண்டறிந்ததும் உரிய நேரத்திற் குள் சரியான சிகிச்சை அளித்ததாலும் அந்த வயது முதிர்ந்த பெண் மீண்டும் வழக்கமான வாழ்க்கையை வாழ்வது சாத்திய மானது. இதனை அவருக்கு சிகிச்சை அளித்த சென்னை காவேரி மருத்துவமனையின் மார்பகம் மற்றும் புற்றுநோய் அறுவைசிகிச்சை சிறப்பு மருத்துவர் கீர்த்தி கேத்தரின் கபீர் தெரி வித்தார். இது குறித்து அவர் கூறுகையில் “இப்பெண்மணிக்கு 50 வயதுகளின் பிற்பகுதியில் மார்பக புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டு அவருக்கு கீமோதெரபி சிகிச்சையும் அதைத்தொடர்ந்து அவரது இடது மார்பகத்தை அகற்றுவதற்காக மாஸ்டெக்டமி அறுவைசிகிச்சையும் செய்யப்பட்டது. அகற்றப்பட்ட அதே இடது மார்பக பகுதியில் சில நிணநீர் முடிச்சுகள் இருப்பதை தன்னால் உணர முடிகிறது என்று சமீபத்தில் கூறிய அந்த மூதாட்டி காவேரி மருத்துவனையை அணுகினார். அவருக்கு செய்யப் பட்ட அல்ட்ராசவுண்டு சோதனையில் பல ஆண்டுகளுக்கு முன்பு அகற்றப்பட்ட அதே இடது மார்பகம் சுவர் மீது 5-6 நிணநீர் முடிச்சுகள் இருப்பது தெரியவந்தது. அந்த நிணநீர் முடிச்சுகள், அறுவைசிகிச்சை வழியாக அகற்றப்பட்டன. அவருக்கு கீமோ தெரபி சிகிச்சை தேவைப்படவில்லை. இந்த நிகழ்விலிருந்து மற்றவர்கள் அறிந்து கொள்ள வேண்டிய ஒரு செய்தி, வயது முதிர்ந்த பெண்மணியால் அவரது உடலில் சில நுட்பமான மாற்றங்கள் இருப்பதை கண்டறிய முடிந்திருக்கிறது. ஒருமுறை யல்ல, இரண்டு முறை அதை அவர் திறம்பட செய்திருக்கிறார். சுய மார்பக பரிசோதனை, ஆரம்ப நிலையிலேயே பாதிப்பைக் கண்டறியவும் உரிய நேரத்திற்குள் சிகிச்சை பெற்று பாதிப்பில் இருந்து மீளவும் உதவும் என்றார் டாக்டர் கீர்த்தி கேத்தரின்.