districts

தொடர்மழை நிரம்பிய சோத்துப்பாறை அணை வெள்ள அபாய எச்சரிக்கை

‘தூங்கி வழியும் தலைமை

திருவனந்தபுரம், மே 5- சட்டப்பேரவைத் தேர்தலில் ஏற்பட்ட பெரும் தோல்வியைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியிலும் யுடிஎப்பிலும் கலகம் தொடங்கி யது. ‘தூங்கும் தலைமை’ என சமூக ஊட கங்களில் கேபிசிசி தலைவர் முல்லப்பள்ளி ராமச்சந்திரனுக்கு எதிரான பதிவுக்கு பலரும் ஆதரவான கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள் ஆனால், சமூக ஊடகங்களில் பெருகி வரும் விமர்சனங்களுக்காக, தான் பதவி விலகத் தயாராக இல்லை என்று முல்லப் பள்ளி ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். தோல்விக்கான பொறுப்பை ,தான் ஏற்றுக் கொண்டாலும், பதவியில் நீடிக்கலாமா என்பதை உயர் மட்ட தலைமைதான் தீர்மானிக்க வேண்டும் என்று முல்லப்பள்ளி கூறுகிறார். இதற்கிடையில், காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹைபி ஈடன் ‘தூங்குமூஞ்சி தலைவர் என முல்லப் பள்ளி மீது கடுமையான தாக்குதலைத் தொடங்கினார். இப்படி தூங்கி வழியும் ஒரு தலைவர் இன்னும் எதற்காக என்று அவர் தனது முகநூல் பதிவில் கேள்வி எழுப்பி யுள்ளார். எதிர்கட்சி தலைவர் பதவிக்கு குறி இதனிடையே முல்லப்பள்ளி மற்றும் ரமேஷ் சென்னிதலாவுக்கு எதிரான  நடவ டிக்கையை காங்கிரசின் எதிர் கோஷ்டி தீவிரப்படுத்தியது. சென்னித்தலாவின் எதிர்க் கட்சித் தலைவர் பதவிக்கு எதிரான நகர்வை தொடங்கியுள்ளனர். திருவஞ்சூர் ராதா கிருஷ்ணனை முன்னிறுத்தி இந்த ஆட்டத்தை தொடங்கியுள்ளனர். இதற்கு உம்மன் சாண்டியின் மறைமுக ஒப்புதலும் உள்ளது. காங்கிரசில் ஒரு பெரிய அறுவை சிகிச்சை தேவை என்கிற கே.சி.ஜோசப்பின் கோரிக்கை இவற்றின் ஒரு பகுதியாகும்.

கேரளத்தில் காங்கிரஸின் தோல்வி குறித்து அறிக்கை ஒன்றை கட்சித் தலைமை கோரியது. இந்த அறிக்கை ஒரு வாரத்திற் குள் ஏஐசிசி பொதுச் செயலாளர் தாரிக்  அன்வரிடம் சமர்ப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் தோல்வி குறித்து விவாதிக்க 7 ஆம் தேதி அரசியல் விவகாரக் குழுக்களின் கூட்டத்தை கேபிசிசி கூட்டியுள்ளது. முஸ்லீம் லீக், ஆர்எஸ்பி மற்றும் கேரள காங்கிரஸ் (ஜோசப்) ஆகிய கட்சிகளும் காங்கிரஸ் தலைமைக்கு கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தின. காங்கிரசில் கோஷ்டி தகராறு தோல்விக்கு ஒரு காரணம் என்று பி.ஜே.ஜோசப் வெளிப்படையாக கூறினார். பாஜக-என்டிஏவிலும் விரிசல் பாஜக முன்னேறாது என்றும், ஹெலி காப்டர் அரசியல் வட இந்தியாவைப் போல கேரளாவில் செல்லுபடியாகாது என்றும் சி.கே.பத்மநாபனின் அறிக்கை பாஜகவின் கேரள மாநில தலைவர் கே.சுரேந்திரனுக்கு எதிராக பாஜகவுக்குள் உருவாகும் கரு மேகம். காஞ்சிரப்பள்ளியில், காங்கிரசுக்கு 2,000 க்கும் மேற்பட்ட வாக்குகள் பதிவாகி யுள்ளதாக பாஜக வேட்பாளர் அல்போன்ஸ்  கண்ணந்தானம் கூறியது அக்கட்சியின் வாக்கு விற்பனையை தெளிவுபடுத்தி யுள்ளது. என்டிஏவிடம் இருந்து கழட்டிக்கொள்ள பிடிஜேஎஸ் தயாராகி வருவதற்கான அறிகுறி கள் உள்ளன. என்டிஏ ஒருங்கிணைப்பானர் பதவியில் இருந்து விலகத் தயாராக இருப்ப தாக துஷார் வெள்ளாப்பள்ளி பாஜக தலை மைக்கு தெரிவித்துள்ளார். குண்டறா தொகுதி யில், பாஜகவின் வாக்குகள் மூன்றில் ஒரு பங்காகக் குறைக்கப்பட்டது என்று என்டிஏ  வேட்பாளர் வனதா வித்யாதரன் கூறியது பிடிஜேஎஸ் - பாஜக கூட்டணியில் எற்பட்டு வரும் பிளவுகளின் அறிகுறியாக கருதப்படு கிறது. குண்டறா தொகுதியில் 2016இல் பாஜக பெற்றது 20,257 வாக்குகள், இம்முறை பிடிஜேஎஸ் பெற்றது வெறும் 6097 வாக்குகள் மட்டும். இங்கு அமைச்சர் மேழ்சிக்குட்டி யம்மாவை தோற்கடிக்க நடந்த சதியும் இதன் மூலம் அம்பலமாகி உள்ளது.

;