districts

வெளிப்பாடு அடிப்படையிலான கல்விமுறை மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும்

சென்னை, ஜூன் 4-

     ஓபிஇ (Outcome Based Education) எனப்படும் வெளிப்பாடு அடிப்படையிலான கல்விமுறை குழப்பத்தை தான் ஏற்படுத்தும் என்றும்  இது மாணவர்களையும் அவர்களது எதிர்காலத்தையும் பெரிதும் பாதிக்கும் என்றும் பொது பள்ளிக்கான மாநில மேடை தெரிவித்துள்ளது.

    மாநிலக் கல்விக் கொள்கையை உருவாக்குவதற்காக அமைக்கப்பட்ட உயர்நிலைக் குழுவினரை  பொதுப் பள்ளிக்கான மாநில மேடை (எஸ்பிசி எஸ்எஸ்-டிஎன் ) நிர்வாகிகள் சமீபத் தில் சந்தித்துப்பேசினர்.  மாநில மேடை யின் சார்பில் டாக்டர் பி. ரத்ன சபாபதி, பேராசிரியர் ஏ. கருணானந் தம், டாக்டர் சி.எஸ்.ரெக்ஸ் சற்குணம், டாக்டர் ரவிக்குமார் மற்றும் பி.பி.பிரின்ஸ் கஜேந்திர பாபு ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.  

   இந்த குழுவினருடன் விவாதிக்கப் பட்ட விஷயங்களை பொது பள்ளிக் கான மாநில மேடை தெரிவித்துள்ளது.  அதன் விவரம் வருமாறு;

    வெளிப்பாடு அடிப்படையிலான கல்விமுறை  என்பது தமிழ்நாடு உயர் கல்வி வளர்ச்சியின் மீதான திட்டமிட்ட தாக்குதல் மற்றும் உயர்கல்வி அமைப்பையே உடைக்கும் உள்நோக்கம் கொண்டதாகும்.   மேற்கத்திய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட வெளிப்பாடு அடிப்படையிலான கல்வி முறை அதன் மதிப்பீட்டு அளவீடுகளிலேயே (Evaluation) முழுமை பெறும்.

    “Moving from traditional OBE through transitional OBE to transformational OBE” (Spady 1994) போன்ற சொல்லாடல்கள் OBE  உறுதியற்ற, நிச்சயமற்ற இலக்குகள் கொண்ட ஒரு கல்வி முறை என்பதும்,  மாணவர்களையும் நாட்டின் எதிர் காலத்தையும் பெருமளவில் பாதிக் கும் என்பதும் உறுதியாகிறது. இதன்  விளைவாக, பாட அடிப்படையிலான பாடத்திட்டம் மறைந்துவிடும்.

    வெளிப்பாடு அடிப்படையிலான கல்வி முறையை இதுவரை தீவிரமாக பின்பற்றிய ஒருசில நாடுகளிலும் கூட அவற்றின் விளைவுகள் எதுவுமே முறையாக ஆவணப்படுத்தப்படவில்லை.  

   இந்தியாவில் வெளிப்பாடு அடிப் படையிலான கல்வி‘ அமலாவதற்கு முன்பே அதாவது 2013க்கு முன்  பல லட்சம் இந்தியப் பொறியியல் பட்டதாரிகள் உலகெங்கிலும் தமது திறமை, திறன்களால் வேலை வாய்ப்புகளையும் பெற்றிருந்தனர் என்பதும் வரலாற்று உண்மையாகும்.  OBE ஒரு மனித மனத்தின் ஒட்டு மொத்த வளர்ச்சியை நோக்கி செல்லு கின்ற இயற்கை பயணமான கல்விக்கு எதிரானது.  

    முன்னரே நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளின் குறிப்பிட்ட விளைவு களை மட்டுமே அடைவதால்,  முழு மையான கற்றலுக்கான அணுகுமுறை மாணவர்களுக்குத் தேவையில்லாத ஒன்றாகிறது. தற்போதைய ஒட்டு மொத்த மதிப்பெண் சான்றிதழுக்கு மாற்றாக OBE முறைமையில் வழங்கப் படவிருக்கும் சான்றிதழ் மாணவர் வாழ்வை நிரந்தரமாக பாதிக்கும் என்று  பொது பள்ளிக்கான மாநில மேடை சுட்டிக்காட்டியுள்ளது.

;