districts

img

மாணவர்களின் புதிய தயாரிப்புகள் கண்காட்சி

சென்னை, டிச. 8– சிமாட்ஸ் ஸ்கூல் ஆப் என்ஜினியரிங் கல்லூரியின் புதிய கண்டுபிடிப்புகள் பிரிவு புதிய தயாரிப்புகள் கண்காட்சி மற்றும் முதலீட் டாளர்கள் இணைப்பு நிகழ்ச்சியை சமீபத்தில் நடத்தியது. இதில் ஏராளமான பொருட்கள் காட்சிப்படுத் தப்பட்டதோடு, ஏராளமான முதலீட்டாளர்கள் கலந்து  கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை சவீதா  பல்துறை தொழில்முனை வோர் ஊக்குவிப்பு மற்றும் மேம்பாடு பூங்கா செய்திருந்தது. இது புதிய கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் முதலீட்டாளர்களை இணைக்கும் நிகழ்ச்சியாக அமைந்தது. மாணவர்களின் 100க்கும்  மேற்பட்ட புதிய கண்டு  பிடிப்புகள், அவர்களின் பன்முகத்தன்மை, பல்துறை திறன்கள் மற்றும் தற்போதைய காலத்திற்கு ஏற்ற வகையிலான தயாரிப்புகள்  இடம் பெற்றி ருந்தது.  மயூரா ஆட்டோமே ஷன் அன்ட் ரோபோடிக் சிஸ்டம்ஸ் நிறுவனர் ஹரிஹர சுப்ரமணியன், ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி ஸ்ரீமதி மற்றும் இன்பேன்ட் என்ஜினியர்ஸ்  நிர்வாக இயக்குநர் ராஜ சேகரன் உள்ளிட்டோர் இதில்கலந்துகொண்டு மாணவர்களை பாராட்டினர்.

;