கடலூர், அக்.13- மார்க்சிஸ்ட் கட்சியின் கடலூர் மாநகர 24 வது மாநாடு நினைவரங்கில் நடைபெற்றது. பி.கலியபெருமாள், எம்.காதர் பீபி ஆகியோர் நடைபெற்ற எஸ்.சிவராமன் என்கின்ற சசி செங்கொடியை ஏற்றி வைத்தார். எஸ்.செந்தமிழ் செல்வன் அஞ்சலி தீர்மானத்தை முன்மொழிந்தார். மாவட்டக்கு குழு உறுப்பினர் எஸ்.கே.பக்கிரான் வரவேற்றார். மாநிலக் குழு உறுப்பினர் எஸ். ஜி.ரமேஷ் பாபு துவக்கி வைத்து பேசினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.மருதவாணன், வி.சுப்புராயன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மாநகர செயலாளர் ஆர்.அமர்நாத் வேலை அறிக்கையை சமர்ப்பித்தார். வரவு -செலவு அறிக்கையை வி.திருமுருகன் சமர்ப்பித்தார். மாநாட்டை நிறைவு செய்து மாவட்டச் செயலாளர் கோ.மாதவன் உரையாற்றினர். எஸ்.கருணாகரன் நன்றி கூறினார். மாநகரக்குழு 15 பேர் கொண்ட கடலூர் மாநகர குழுவின் செயலாளராக ஆர்.அமர்நாத் தேர்வு செய்யப்பட்டார். தீர்மானம் கடலூர் துறைமுகத்தை ஆழப்படுத்தி விரிவுபடுத்த வேண்டும், உப்பு நீர் உட்புகுவதை தடுக்க வேண்டும். குடிநீர் காசுக்கு வாங்குவதை தடுக்கவும், சாக்கடை கலக்காத பாதுகாப்பான குடிநீர் அனைத்து பகுதி மக்களுக்கும் வழங்க வேண்டும். கொண்டங்கி ஏரியை பாதுகாக்க வேண்டும். கஸ்டம்ஸ் சாலை, ஜவான்ஸ் பவன் சாலை, மற்றும் அனைத்து தெருக்களிலும் தெரு விளக்கு பொருத்த வேண்டும். கெடிலம், பண்ணையாறு கரைகளை உயர்த்த வேண்டும். கடலூரில் மருத்துவ கல்லூரி அமைக்க வேண்டும். ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்களை வழங்க வலியுறுத்தி அக்டோபர் 26 ஆம் தேதி போராட்டம் நடத்துவது என்றும், மாநகராட்சியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி நவம்பர் முதல் வாரத்தில் மாநகராட்சி முன்பு போராட்டம் நடத்துவது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.