districts

img

பார்சல், மெயில் சேவையை உலக தரத்துக்கு உயர்த்த வேண்டும்

சென்னை,அக்.10-  தேசிய அஞ்சல் வாரத்தை முன்னிட்டு, சென்னை அண்ணாசாலையில் உள்ள ஆர்எம்எஸ் முதுநிலை கண்காணிப்பாளர் அலுவலகம் சார்பில், மெயில் தினம் மற்றும் சிறப்பாக பணியாற்றிய ஊழியர் களுக்கு மண்டல விருது வழங்கும் விழா  நடைபெற்றது. ஆர்எம்எஸ் முதுநிலை கண்காணிப் பாளர் எஸ்.பாக்கியலஷ்மி வரவேற்புரை ஆற்றினார். தமிழ்நாடுவட்ட தலைமை அஞ்சல் துறை தலைவர் மரியம்மா தாமஸ்  சிறப்புவிருந்தினராகப் பங்கேற்று, சிறப்பாகப் பணிபுரிந்த 78 ஊழியர்களுக்கு விருதுகளை வழங்கி பேசிய அவர், தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் மிகப்பெரிய  ஆர்எம்எஸ் பிரிவாக, இந்த ஆர்எம்எஸ் பிரிவு திகழ்கிறது.  பார்சல் சேவையை மேம்படுத்த கடந்த ஒரு மாதத்தில் பல்வேறு அதிகாரிகள் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டு அங்கு மேற்கொள்ளப்படும் பார்சல் சேவையை அறிந்துகொண்டு, அதை  இங்குசெயல்படுத்த முடிவு செய்யப் பட்டுள்ளது. இதன்மூலம், பார்சல் மற்றும் மெயில் சேவையை சர்வதேச தரத்துக்கு உயர்த்த இயலும். அதற்கேற்ப வருவாயும் உயரும் என்றார்.  இந்நிகழ்ச்சியில், உதவி அஞ்சல்துறை தலைவர் (வர்த்தக மேம்பாடு) பி.நீரஜ், உதவி அஞ்சல் துறைதலைவர் (மெயில்) வி.குமாரகிருஷ்ணன், அண்ணாசாலை வர்த்தக அஞ்சல் மையத்தின் அதிகாரி (பொறுப்பு) பி.வெற்றிக்குமார் உள்ளிட் டோர் பங்கேற்றனர். இதேபோல், ஏர்மெயில் பிரிப்புமண்டல அலுவலகம் சார்பில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில், தமிழ்நாடு வட்ட தலைமை அஞ்சல்துறை தலைவர் மரியம்மா  தாமஸ் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, சிறப்பாகப் பணிபுரிந்த ஊழியர்களுக்கு விருதுகளை வழங்கினார்.