districts

img

கடலூர் மாநகராட்சியில் நகர விற்பனை குழு உறுப்பினர் தேர்தல்

கடலூர், ஆக.31- கடலூர் மாநகராட்சி பகுதியில் 3,200 க்கும் மேற்பட்ட பதிவு பெற்ற சாலையோர வியாபாரிகள் உள்ளனர். இந்த நிலையில், தமிழ்நாடு சாலையோர வியாபாரிகள் வாழ்வாதார பாதுகாப்பு மற்றும் வியாபாரத்தின் முறைப்படுத்தும் சட்ட விதிகள் 2015 படி நகர விற்பனை குழு உறுப்பினர் தேர்தலுக்கான தேர்தல் வாக்கு சீட்டு முறையில் சனிக்கிழமை(ஆக.31) நடைபெற்றது.  மொத்தம் 6 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படும் வேண்டிய நிலையில் பிற்படுத்தப்பட்டோர் உறுப்பினர் வி.குளோப், சிறுபான்மையினர் உறுப்பினர் அப்துல் காதர் ஆகிய இருவரும்  போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட நிலையில் பொது உறுப்பினர், மகளிர் உறுப்பினர், மாற்றுத்திறனாளி உறுப்பினர், பட்டியலின உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற்றது.  4 உறுப்பினர்களுக்கு 9 பேர் போட்டியிட்ட நிலையில் நடைபெற்ற தேர்தலில் ஏராளமான சாலையோர வியாபாரிகள் வரிசையில் நின்று வாக்களித்தனர்.