districts

சென்னை முக்கிய செய்திகள்

அரசு பள்ளிகளை தரம் உயர்த்த  மாவட்ட அளவில் கண்காணிப்பு குழு

 செங்கல்பட்டு, ஜூலை 6-  செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் தரத்தை உயர்த்த மாவட்ட ஆட்சியர் தலைமையில் கண்காணிப்பு குழு தொடங்கப்பட்டுள்ளது.  செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள அரசு பள்ளிகள் அரசு உதவி பெறும் பள்ளிகள் மத்திய அரசு பள்ளிகள் மற்றும் மெட்ரிக் பள்ளிகள் என மொத்தம் உள்ள 1486 பள்ளிகளின் தரத்தை உயர்த்த மாவட்ட அளவில் உருவாக்கப்பட்டுள்ள மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழுவின்  முதல் கூட்டம் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் ச. அருண் ராஜ் தலைமையில் நடைபெற்றது. இந்தக் குழுவின் முதல் கூட்டம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற்றது   இந்த கூட்டத்தில் பள்ளியை சுற்றி புகையிலை குட்கா போன்ற பொருட்கள் விற்பனையை தடுத்தல், அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளின் சேர்க்கையை அதிகரித்தல், குழந்தை திருமணங்கள் சார்ந்த புகார்களை கண்காணித்தல் பள்ளியில் படிக்காமல் மாணவர்கள் வெளியில் இருப்பவர்கள் குறித்து கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுத்தல், மாணவர்களின் வாசிப்பு திறனை அதிகரித்தல், அனைத்து வகை  பள்ளிகளில் கட்டமைப்பை உயர்வாக்குதல், பள்ளிகளில் கல்வி முறை மற்றும் தரத்தினை  உயர்த்துதல், மாணவர் சேர்க்கை, மாணவர்  வருகை பதிவினை கண்காணித்தல், பள்ளி  இடைநின்ற மாணவர்களை கண்காணித்தல், வருகை புரியாத மாணவர்களை கண்காணித்தல், உயர் தொழில்நுட்ப ஆய்வக வசதிகள். மதிப்பீட்டு புலம் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களின் சிறப்பு மதிப்பீடு பள்ளி பார்வை, வகுப்பறை உற்று நோக்கல், எண்ணும் எழுத்தும் இயக்கம், இல்லம் தேடி கல்வி வானவில் மன்றம், முன்னாள் மாணவர்கள் இணைப்பு திட்டம் ஆகியவற்றை மாவட்ட  அளவில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் கண்காணித்து ஆய்வு கூட்டம் நடத்தி பள்ளி  மாணவர்களின் தொடர் முன்னேற்றத்திற்கு வழிவகை செய்வது குறித்து ஆலோசிக்கப் பட்டது.  இக்கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியர் அரசு மற்றும் அரசு உதவி பெறும்  பள்ளிகளின் தரத்தை உயர்த்த முன்னுரிமை அளிக்கப்படும் என்றார்.  செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள தனியார் கார்ப்பரேட் தொழிற்சாலைகளில் இருந்து பெறப்படும் சமூக பாதுகாப்பு நிதியினை வைத்து அரசு பள்ளிகளில் பழுதடைந்துள்ள கட்டிடங்கள் சீரமைக்கப்படும் என்றும் கூறினார். பள்ளிக்கு சென்று வர அரசு பேருந்துகள்  சரி வர இயக்கப்படுகிறதா என ஆய்வு செய்த  அவர், அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை சரியாக சென்றடைகிறது என்று அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இந்த கூட்டத்தில் செங்கல்பட்டு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கற்பகம், மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வேல்முருகன், மற்றும் அரசு அலுவலர்கள் தன்னார்வலர்கள், குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மாணவர்கள்  எண்ணிக்கையை அதிகரிக்க கோரிக்கை

  கடலூர், ஜூலை 6- கடலூர் மாவட்டத்தில் அரசு கலைக் கல்லூரிகளில் மாண வர்கள் சேர்க்கை எண்ணிக் கையை உயர்த்த தமிழக  அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது.  இது குறித்து கட்சியின் மாவட்ட செயலாளர் கோ. மாதவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடலூர்  மாவட்டத்தில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் போதுமான இடம் இல்லாமல் மாணவர்கள் கல்லூரியில் சேர  முடியாமல் அவதிப்படுகின்றனர். குறிப்பாக கடலூர் பெரியார் கலைக் கல்லூரி, சிதம்பரம் மற்றும் விருத்தாசலம்  கலைக் கல்லூரிகளில் மாணவர் எண்ணிக்கையை உயர்த்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கடலூர்  மாவட்டத்தில் சட்டக் கல்லூரி தொடங்க நடவடிக்கை எடுக்க  வேண்டும் என்று வலியுறுத்தி யுள்ளார்.

அரசு கலைக் கல்லூரியில் புத்தொளி விழா

திருவண்ணாமலை ஜூலை 6-  திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரி யில் தமிழ்த்துறை சார்பில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு புத்தொளி விழா தமிழ்த்துறைத் தலைவர் சுப்புலட்சுமி தலைமையில் நடைபெற்றது. பேராசிரியர்கள் பிரேம்குமார் கலைமா மணி முன்னிலை வகிக்க பேராசிரியர் பாலமுருகன் அனைவரையும் வரவேற்றார்.  பேராசிரியர்கள் சாந்தமூர்த்தி ராஜ மாணிக்கம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கி னர். இந்த விழாவில் சிறப்பு அழைப்பாள ராக கலந்து கொண்ட பாவலர் ப.குப்பன் வள்ளுவம் காட்டும் வாழ்வியல் என்னும் தலைப்பில் இசை உரையாற்றினார். புத்தொளி விழாவில் கல்லூரி பேராசிரி யர்கள் மாணவ மாணவிகள் முக்கிய பிரமுகர் கள் கலந்து கொண்டனர். முடிவில் பேராசிரி யர் வைத்தீஸ்வரன் நன்றி கூறினார்.

கடலூரில் பாமக பிரமுகருக்கு அரிவாள் வெட்டு

கடலூரில் பாமக பிரமுகருக்கு அரிவாள் வெட்டு  கடலூர், ஜூலை.6 - கடலூரில் பாமக பிரமுகர் வெட்டப்பட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டார். கடலூர் திருப்பா திரிப்புலியூர் சூரப்ப நாயக்கன் சாவடி பகுதியை சேர்ந்தவர் சங்கர் என்கின்ற சிவசங்கர். கேபிள் டிவி தொழில் நடத்திவரும் இவர் பாட்டாளி மக்கள் கட்சி யில் உள்ளார்.  கடலூர் நகர முன்னாள் வன்னியர் சங்க தலைவராகவும் செயல்பட்டு வந்துள்ளார். இவர் சனிக்கிழமை மாலை தனது வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தபோது இரண்டு சக்கர வாகனத்தில் வந்த நான்கு மரர்ம நபர்கள்  இவரை சரமாரியாக வெட்ட துவங்கினார்கள். அரு கில் உள்ளவர்கள் கூச்சல் இடவே அவர்கள் அங்கி ருந்து தப்பி சென்ற நிலை யில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அங்கி ருந்தவர்கள் சங்கரை மீட்டு கடலூர் அரசு மருத்துவ மனையில் அனுமதித்தனர். தற்பொழுது சங்கருக்கு கடலூர் அரசு மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கழுத்து, வாய், முதுகு என பல்வேறு பகுதிகளிலும் வெட்டுக்காயம் உள்ளது. கடந்த சில தினங்க ளுக்கு முன்பு வண்டிப் பாளையம் பகுதியில் ஒரு கொலை சம்பவம் நடந்த நிலையில் தற்போது பாட்டாளி மக்கள் கட்சி பிரமுகர் மர்ம நபர்களால் வெட்டப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில்  மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி கொண்டு செல்லப் பட்டார். உறவினர்கள் கட லூர் அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.

ஊழல் நிறைந்த கூட்டணி ஆட்சி 
புதுச்சேரி அரசு குறித்து நாராயணசாமி சாடல்

புதுச்சேரி, ஜூலை 6- “ஊழல் நிறைந்த ஆட்சிக்கு கூட்டணி  கட்சியே முடிவு கட்டிவிடும்” என்று புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயண சாமி கூறியுள்ளார். முன்னாள் முதல்வர் நாராயணசாமி புதுச்சேரியில் சனிக்கிழமை செய்தி யாளர்களை சந்தித்தார். அப்போது அவர்  கூறியது: மக்களவைத் தேர்தலில் புதுச்சேரி யில் பாஜக வேட்பாளர் படுதோல்வி அடைந்ததற்கு முக்கிய காரணம், இந்த  ஆட்சியாளர்கள் மக்கள் நலத்திட்டங் களை நிறைவேற்றாததே. ரெஸ்டோ பார்கள்  அதிகரித்துவிட்டன. மதுபான தொழிற்சாலை களிடம் கையூட்டு பெற்றுக்கொண்டு அனுமதி வழங்குகின்றனர். பொதுப்பணித்துறையில் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது. குப்பை வாருவதில் ஊழல், சிவப்பு ரேஷன் அட்டை  கொடுப்பதில் லஞ்சம், அனைத்து டெண்டர் களிலும் கமிஷன் வாங்கப்படுகிறது என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை டெல்லி தலைவர்களிடம் கூறி, இந்த ஆட்சிக்கு கொடுக்கும் ஆதரவை திரும்பப்பெற வேண்டும். இல்லை யென்றால் நாம் வெளியில் வந்து ஆதரவு கொடுக்க வேண்டும். முதல்வர், என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பாஜக அமைச்சர்கள் ஊழலில் திளைத்துள்ளனர் என்று பகிரங்க குற்றச்சாட்டுக்களை சொல்லிவிட்டு வந்திருக்கிறார்கள். காங்கிரஸ் கட்சி சார்பில் நான் ஊழல் குற்றச்சாட்டுக்களை கடந்த இரண்டரை ஆண்டுளாக கூறி வந்தேன். தற்போது அதை ஆளும் கட்சியில் உள்ள பாஜக, சுயேட்சை,  நியமன எம்எல்ஏ-க்கள் உறுதிப்படுத்தி இருக்கிறார்கள். இதிலிருந்து காங்கிரஸ்  கட்சி கூறிய புகார்கள் உறுதி செய்யப்பட் டிருக்கிறது. ஆளும் கூட்டணியைச் சேர்ந்த வர்களே அதனை ஏற்றுக்கொண்டு இருக்கிறார்கள். ஊழல் குற்றச்சாட்டுக்களுக்கு முதல்வர்,  அமைச்சர்களிடம் இருந்து எந்தவித பதிலும் வரவில்லை. உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தேர்தலில் தோல்வியுற்ற பிறகும் கூட அதிகார துஷ்பிரயோகம் செய்து  வருகிறார். கன்னியக்கோயில் பகுதியில் அவருடைய மனைவியின் பெயரில் 12  ஆயிரத்து 400 சதுரடி நிலம் வாங்கப்பட்டி ருக்கிறது. அந்த நிலத்தில் பினாமியின்  பெயரில் பெட்ரோல் பங்க் அமைக்கப் படுகிறது. ஆனால், அங்குள்ள சீனிவாசா  கார்டன் செல்லும் வழியை ஆக்கிரமித்துள்ள னர். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்த ஆட்சியாளர்கள் சொத்துக்களை அபகரிப்பதில் எப்படி முனைப்பாக இருக் கிறார்கள் என்பதற்கு இது உதாரணம் என்றார். பொதுப்பணித்துறை அமைச்சரின்  வீடு ரூ.2 கோடி செலவு செய்து புதுப்பிக்கப் படிருக்கிறது. இதற்கு யார் அவருக்கு அனுமதி கொடுத்தது? என்றும் அவர் நாராயணசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.