districts

img

மாவட்ட அளவிலான கோகோ போட்டிகள் விளையாட்டு பல்கலைக்கழக மாணவிகள் அணி முதலிடம்

செங்கல்பட்டு, நவ.1-  செங்கல்பட்டு மாவட்ட அளவிலான நடைபெற்ற கோகோ விளையாட்டு போட்டிகளில் தமிழ்நாடு விளையாட்டு மற்றும் மேம்பாட்டு பல்கலைக்கழக மாணவிகள் அணி முதலிடம் பெற்றது   செங்கல்பட்டு மாவட்ட அளவிலான கோகோ போட்டிகள் செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கத்தில் செயல்பட்டு வரும் குட் ஷெப்பர்ட் தனியார் பள்ளியில் நடைபெற்றது. இப் போட்டியில் செங்கல்பட்டு மாவட்ட அளவிலான 11 மாணவிகள் அணி 12 மாணவர் அணிகள் பங்கேற்றன.   இப்போட்டியில் சப்ஜூனியர் மாணவிகள் பிரிவில் மாவட்ட அளவில் கவிதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல் இடத்தையும், சீனியர் பிரிவில் செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அடுத்த மேலக்கோட்டையில் செயல்பட்டு வரும் தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணைய பல்கலைக்கழகம் மாணவிகள் அணி முதல் இடத்தையும்  தட்டிச் சென்றனர். மேலும் பல்வேறு பிரிவுகளில் கலந்து கொண்ட கோகோ விளையாட்டு வீராங்கனைகளுக்கு பல்வேறு பரிசுகளும் கோப்பைகளும் வழங்கப்பட்டது   வெற்றி பெற்ற மாணவர்களுக்கு குட் ஷெப்பர்ட் பள்ளியின் முதல்வர் ஜெஸின் ரோஸ், தாளாளர் ஜெனிபர் கோக்கோ பயிற்சியாளர் சுரேந்தர் உள்ளிட்ட பலர் கோப்பைகளை வழங்கினர். காலமானார் சென்னை, நவ. 1 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பெரும்பாக்கம்  கிளை உறுப்பினர் ஆமோசின் தாயார் சுகந்தா உடல் நலக்குறைவால் வியாழனன்று (அக்.31) காலமானார். அவருக்கு வயது 70. அவரது உடலுக்கு கட்சியின் கிளைச்செயலாளர் கே.குணசேகரன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதனை தொடர்ந்து அன்னாரது உடல் நன்மங்கலம் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது.