கடலூர், டிச.18- பண்ருட்டி அருகே தென்பெண்ணை ஆற்றில் பழங்கால மக்கள் பயன்படுத்திய சுடுமண் புகைபிடிப்பான், அகல் விளக்கு உள்ளிட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டது. கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே உள்ள திரிமங்கலம் தென்பெண்ணை ஆற்றில் தொல்லியல் ஆய்வாளர் இம்மானுவேல் மற்றும் வரலாற்று ஆர்வலர் பிரதாப் ஆகியோர் மேற்புற களஆய்வு மேற்கொண்ட னர். அப்பொழுது கண்டெ டுத்த புகைபிடிப்பான் மூலம் பழங்கால மக்க ளும் புகைப்பிடிக்கும் பழக்கம் கொண்டவர்கள் என்பது உறுதியாவதாக வும் பழங்கால மக்கள் வாழ்ந்ததற்கான தொல்லி யல் சான்றுகள் தொடர்ந்து கண்டறியப்பட்டு வருவதால் அப்பகுதியில் தொடர்ந்து ஆய்வுகள் செய்யப்படும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.