districts

img

பழுதடைந்த பள்ளிக் கட்டிடம்: அச்சத்தில் மாணவர்கள்

விழுப்புரம், செப். 22- விழுப்புரம் அருகே உள்ள காவணிப்பாக்கம் பஞ்சாயத்துக்குட்பட்டது மேலமேடு கிராமம், இங்குள்ள அரசு தொடக்கப் பள்ளி 1972ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இங்கு சாலாமேடு, காவணிப் பாக்கம் கிராமங்களை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வந்த நிலையில், தற்போது 35 மாணவர்கள் மட்டுமே படித்து வருகின்றனர். முறையான பராமரிப்பு இல்லாததால் தற்போது இந்த பள்ளிக் கட்டிடம் பழுதடைந்து சுவர்களில் ஆங்காங்கே விரிசல் காணப் படுகிறது. மேற்கூரையில் வேயப்பட்டுள்ள ஓடுகளும் உடைந்திருப்பதால் மழை பெய்தால் வகுப்பறைகள் குளமாக மாறிவிடுகிறது. பள்ளிக்கு விடுமுறை அளித்துவிடுகிறார்கள்.   இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் தெரி வித்தும் நடவடிகை எடுக்க வில்லை. பருவ மழைக் காலம் நெருங்கி வருவ தால் மாணவர்கள் அச்சத்து டன்தான் பள்ளிக்குச் செல்கின்றனர். எனவே,  பள்ளி கட்டிடத்தை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

;