தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் இந்திய சைக்கிள் கூட்டமைப்பு கூட்டாக நடத்திய 76 ஆவது தேசிய ட்ராக் சைக்கிளிங் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராங்கனைகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அழைத்து பாராட்டினார். இளைஞர் நலன மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை கூடுதல் தலைமைச் செயலர் அதுல்ய மிஸ்ரா விளையாட்டு மேம்பாட்டு ஆணை உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி உள்ளிட்ட உடன் இருந்தனர்.