districts

img

அமித்ஷாவை கண்டித்து ராணிப்பேட்டையில் ஆர்ப்பாட்டம்...

சட்டமேதை, புரட்சியாளர் அம்பேத்கர் குறித்து ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் வெறுப்புணர்வு பேச்சை கண்டித்து சிபிஎம் கலவை தாலுகா குழு சார்பில் திங்களன்று (டிச. 23) தாலுகா செயலாளர் எஸ். கிட்டு தலைமையில் மாம்பாக்கம் கூட்ரோடு பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் மாவட்ட செயலாளர் பி. ரகுபதி, தாலுகா குழு உறுப்பினர்கள் ஆர். தனசேகரன், கே. வெங்கடேசன், இ. ராஜா, விசிக மாநில துணை செயலாளர் பாபு,  விதொச மாவட்ட பொருளாளர் வெங்கடேசன், வேட்டைக்காரன் பழங்குடி சங்க மாநில தலைவர் எம். சேட்டு, ஆதிமூலம், சந்திரா, சம்பத் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர்.