districts

img

பட்ஜெட்டை கண்டித்து படப்பையில் ஆர்ப்பாட்டம்

ஒன்றிய அரசின் மக்கள் விரோத பட்ஜெட்டை கண்டித்து படப்பை பஜார் வீதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. குன்றத்தூர் வட்டக்குழு உறுப்பினர்  கே.மூர்த்தி, தலைமை தாங்கினார். இதில் கட்சியின் மாவட்டச் செயலாளர் கே.நேரு, மாவட்டச் செயற்குழு உறுப்பினர் பி.ரமேஷ், ஆகியோர் கண்டித்து பேசினர். குன்றத்தூர் வட்டக்குழு செயலாளர் கே.அண்ணாதுரை வட்டக்குழு உறுப்பினர்கள் ஆர்.நந்தகோபால், ஆர்.சுகுமார், எஸ்.திருஞானம், பி.பிரேமகுமாரி, பி.தேவி, ஆர்.கார்த்திக், வி.சண்முகபாபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.