districts

img

கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும்

மதுராந்தகம், ஜூன் 3- செங்கல்பட்டு மாவட்டத்தில் பால் உற்பத்தியை பெருக்கி, பால் கொள்முதலை அதிகரித்து  பால் உற்பத்தியாளர்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்று ஆவின் நிர்வாகத்திற்கு தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கத்தின் செங்கை மாவட்ட சிறப்பு பேரவை கோரிக்கை விடுத்துள்ளது. சங்கத்தின் மாவட்ட சிறப்பு பேரவை கூட்டம் மாவட்டச் செயலாளர் எஸ்.ரவி தலைமையில் மதுராந்தகத்தில் நடை பெற்றது. சங்கத்தின் மாநில பொதுச்செய லாளர் பி.பெருமாள் துவக்கி வைத்து பேசினார். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் கே. வாசு தேவன் நிறைவு செய்து பேசினார். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மது ராந்தகம் வட்டச் செயலாளர் எம்.எஸ்.அர்ஜுன் குமார் உள்ளிட்ட பலர் வாழ்த்திப் பேசினர். தீர்மானம் தற்போது நிலவிவரும் கடுமையான விலைவாசி உயர்வின் காரணமாக தவிடு, புண்ணாக்கு உள்ளிட்ட மாட்டுத் தீவனம் விலையும் பன்மடங்கு உயர்ந்து விட்டது. ஆனால், பால் கொள்முதல் விலை மட்டும் உயர்த்தப்படவில்லை. எனவே, ஆவின் நிர்வாகம் கொள்முதல் விலையை லிட்ட ருக்கு ரூ.10 உயர்த்தி வழங்க வேண்டும். ஆவின் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களுக்கு ஏற்படும் நட்டத்ததை ஈடு செய்ய ரூ. 900 கோடியை மாநில அரசு மானியமாக வழங்க வேண்டும். கறவை மாடுகளுக்கு வருடத்திற்கு இரண்டு முறை (பிப்ரவரி, ஆகஸ்ட்) மாதங்களில் நோய் தடுப்பூசிகள் செலுத்த உறுதிப்படுத்த வேண்டும். கால்நடை மருந்தகங்கள் தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிர்வாகிகள் சங்கத்தின் செங்கல்பட்டு மாவட்ட தலை வராக தே.லோகேஸ்வரன், செயலாளராக எஸ்.ரவி, பொருளாளராக எம்.எஸ்.அர்ஜுன் குமார் உள்ளிட்ட 21 பேர் கொண்ட மாவட்ட குழு தேர்வு செய்யப்பட்டது.